• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

55 + 4 ... நொறுங்கிய பிளான்.. இடிக்கும் கணக்கு..டோட்டலாக "சாயும்" ஓபிஎஸ்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவருக்குள் லேசான கலக்கம் ஒன்று சூழ்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது.. என்ன காரணம்?

Recommended Video

  OPS EPS இருவருக்கும் தொண்டர்களிடம் செல்வாக்கு இல்லை - K.C.பழனிசாமி அதிரடி | Oneindia Tamil

  ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ளன.. ஒற்றை தலைமை என்ற பேச்சையே ஓபிஎஸ் எடுக்கவில்லை..

  ஒன்றாக பயணிப்போம், சேர்ந்தே கட்சியை வழிநடத்துவோம், அன்புசகோதரர் என்றெல்லாம்தான் பாசமான வார்த்தைகளை உதிர்த்து வருகிறார்..

  கன்ஃபார்ம் ஆன கணிப்பு.. ஓபிஎஸ் பேசியது கேட்டுச்சா? சசிகலா அன்றே சொன்னாரே! டீ யுடன் கலக்குமா வெல்லம்?கன்ஃபார்ம் ஆன கணிப்பு.. ஓபிஎஸ் பேசியது கேட்டுச்சா? சசிகலா அன்றே சொன்னாரே! டீ யுடன் கலக்குமா வெல்லம்?

  கோபம்

  கோபம்

  தன்னுடைய இத்தனை நாள் கோபத்தையும், ஆதங்கத்தையும், அவர் வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை.. இதுதான் ஓபிஎஸ்ஸின் பக்குவப்பட்ட அரசியல்.. ஆனால், எடப்பாடி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற போஸ்டிங்கில் உட்கார்ந்து கொண்டு, செல்லுமிடமெல்லாம் ஓபிஎஸ்ஸை எப்படி தரக்குறைவாக பேசினார்.. சாபம் விடாதக்குறையாக அவரை திட்டி திட்டி தீர்த்தார்.. உங்களுக்குதான் 90 சதவீத ஆதரவாளர்கள் இருப்பதாகவே சொல்றீங்களே?

   பூரிப்பு - மகிழ்ச்சி

  பூரிப்பு - மகிழ்ச்சி

  அப்படி இருந்தும் ஏன் ஓபிஎஸ்ஸை விடாமல் சீண்டிக் கொண்டே இருந்தார்.. காரணம், ஓபிஎஸ்ஸின் எழுச்சியை அனைவரும் அறிவார்கள்.. சாது மிரண்டால் காடு கொள்ளாது.. ஆனாலும், ஓபிஎஸ், இந்த நிமிடம்வரை நாகரீகத்துடன் பேசி வருகிறார்.. அனைவரையும் ஒருங்கிணைந்து செல்லவே அழைப்பு விடுக்கிறார் என்று பூரித்து சொல்கிறார்கள்.. இப்படி ஒருபக்கம் பேச்சுக்கள் கிளம்ப, மறுபக்கம், அதற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன..

   மேலிட பாஜக

  மேலிட பாஜக

  "எதுக்காக எடப்பாடியிடம் ஓடி வருகிறார் ஓபிஎஸ்? எதுக்காக ரகசிய தூது அனுப்பி கொண்டிருக்கிறார்? ஏனென்றால், அவரிடம் உள்ள அதே 90 சதவீத மெஜாரிட்டிதான் முக்கிய காரணம்.. ஓபிஎஸ் கடைசி வரை நம்பியது நீதிமன்றத்தையும், மேலிடத்தையும்தான்.. ஆனால், எடப்பாடி அப்படி இல்லை.. மக்களை நம்பினார்.. தொண்டர்களை நம்பினார்.. இது தானாக சேர்ந்த கூட்டம்.. இந்த கூட்டம் ஓபிஎஸ்ஸுக்கு இல்லை..

   தயவு தாட்சண்யம்

  தயவு தாட்சண்யம்

  அப்படி இருந்திருந்தால், என்னைக்கோ போட்டி பொதுக்குழுவை நடத்தியிருப்பாரே.. தொண்டர்களிடம் ஏதாவது நியாயம் கேட்டு கூட்டம் போட்டாரா? அந்த அளவுக்கு கட்சிக்குள் அவருக்கு ஆதரவு அலை இல்லை என்பதே உண்மை.. இப்போதுகூட அவரால் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த முடியாது.. எந்த நிர்வாகிகளை தன் பக்கம் வைத்திருக்கிறார்.. அதனால்தான் எடப்பாடியின் தயவு அவருக்கு தேவைப்படுகிறது.. என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.

  வைத்திலிங்கம்

  வைத்திலிங்கம்

  உண்மையிலேயே, அதிமுகவில் என்ன நடக்கிறது? அடுத்தக்கட்டத்துக்கு அதிமுக எப்படி செல்லப்போகிறது என்று அரசியல் நோக்கர்கள் ஒருசிலரிடம் நாம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: ஓபிஎஸ்ஸுக்கு தற்காலிக வெற்றி மட்டுமே கிடைத்துள்ளது.. அதனால்தான், இவ்வளவு பெரிய கட்சியை எப்படி வழிநடத்த போகிறோம் என்ற கலக்கம் அவருக்கு இருக்கிறது.. இதுவரை தென்மண்டலத்தை சேர்ந்த வைத்திலிங்கம் உட்பட 4 முக்கிய நபர்களுக்கு முக்கிய பொறுப்புகளை தந்திருக்கிறார்.. இதுபோக, எடப்பாடி தரப்பில் உள்ளவர்களை தன்பக்கம் இழுப்பதற்காக, அவர்களுக்கு பெரிய பெரிய பதவிகளை தரப்போவதாகவும் ஆசைக்காட்டப்பட்டுள்ளது..

   55 பேர்?

  55 பேர்?

  அதுமட்டுமல்ல, 55 மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார்.. இவர்களை வைத்துதான், பொதுக்குழுவை கூட்டி, தன்னுடைய பலத்தையும் பெருக்க போவதாக சொலி புது அசைன்மென்ட்டும் தந்துள்ளார்.. அவர்களின் நிலைமை எல்லாம் என்னவென்று தெரியவில்லை.. ஒருவேளை இவர்கள் 2பேருமே இணைவதாகவே எடுத்துக் கொண்டாலும், ஆளாளுக்கு நிர்வாகிகளுக்கும், தலைவர்களுக்கும் பதவி தந்து வைத்துள்ளனர்.. இந்த பதவிகள் தொடராது என்ற நிலைமை ஏற்பட்டுவிடும்.. அப்படியானால், இதையெல்லாம் திரும்பப் பெறப்படுமா? இதெல்லாம் இனி சிக்கல்தான்.." என்றனர்.

  மைனஸ் பாயிண்ட்

  மைனஸ் பாயிண்ட்

  இதில் இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. "2663 பேரை பிடித்து வைத்துக் கொண்டு சர்க்கஸ் காட்டுகிறார் எடப்பாடி. பயாஸ்கோப் காட்டுகிறார்.. பதவி வெறியின் மொத்த உருவம் தான் எடப்பாடி பழனிச்சாமி. கொடநாடு வழக்கை துரிதமாக செயல்படுத்துங்கள். ஜெயிலுக்கு போறவங்க ஜெயிலுக்கு போகட்டும் வெளியே இருக்கிறவங்க வெளியே இருக்கட்டும் என்று ஓபிஎஸ் டீம் அடுத்த குறியை எடப்பாடி மீது வீசியுள்ளது.. இதுவும் ஓபிஎஸ்ஸுக்கு மைனஸாக பார்க்கப்படும்.. ஒருபக்கம் ஒருங்கிணைந்து வழிநடத்தலாம் என்று சொல்லிவிட்டு, மற்றொரு புறம் கொடநாடு கேஸை விசாரிக்க வேண்டும் என்று புகழேந்தி போன்றோர் சொல்லிவருவது, அவர்களுக்கே சறுக்கலாகி விடும் என்கிறார்கள்.

  English summary
  Does OPS do soft politics and What are the strategies against edapadi palanisamy ஓபிஎஸ்ஸுக்கு தனித்து கட்சியை நடத்தும் அளவுக்கு செல்வாக்கு உள்ளதா
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X