சத்தம் போடாதீங்க.. நானே சுத்தம் பண்றேன்" வாடகை டாக்ஸியில் கேஷூவலாக சொன்ன பெண்.. என்ன நடந்தது
சென்னை: வாடகை டாக்ஸி சீட்டில் பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது.. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது பயணிகளின் பொறுப்பற்ற நடத்தையா என்ற விவாதமும் கிளம்பியுள்ளது... "மெதுவாக பேசுங்கள் நான் சுத்தம் செய்கிறேன்" என அந்தப் பெண் அளித்த பதில் இணையவாசிகள் அனைவரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வாடகை டாக்ஸி சேவைகளும் மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன.. ஆனால், அதே தொழில்நுட்பம் சில நேரங்களில் பயணிகளின் அநாகரீகமான பக்கங்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.. அப்படித்தான் இப்போது சோஷியல் மீடியாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

வாடகை டாக்ஸியில் பெண்
சம்பவத்தன்று, டிரைவர் தன்னுடைய டாக்ஸியில் ஒரு பெண் பயணியை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.. பயணத்தின் நடுவே அந்தப் பெண் எதிர்பாராத விதமாக காரின் சீட்டிலேயே நேரடியாக சிறுநீர் கழித்துள்ளதாக தெரிகிறது..
இதை கவனித்த டிரைவர் கடும் அதிர்ச்சியடைந்தார்.. உடனே அந்த பெண்ணிடம், எனக்கு சோறு போடுவது இந்த டாக்ஸி தான்.. இப்படி என் டாக்ஸை அசுத்தப்படுத்தப்பட்டீங்களே?" என்று புலம்பினார்.. பிறகு உடனடியாக தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்யத் தொடங்கினார்..
அந்த வீடியோவில் டிரைவர், பெண்ணை பார்த்து, "இது என்ன மாதிரியான நடத்தை? ஒரு காரின் உள்ளே இப்படியா செய்வீங்க?" என்று கோபமாக தட்டி கேட்கிறார்.
அதற்கு அப்பெண் பயணி எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிகவும் நிதானமாக டிரைவரைப் பார்த்து, "சத்தமாக பேசாதீங்க, நான் இதை கிளீன் செய்துவிடுகிறேன்" என்று கேஷூவலாக சொல்கிறார்..
கார் சீட்டெல்லாம் வீணா போச்சே
உடனே டிரைவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவாறே, "இது என்னுடைய டாக்ஸி.. இதை வைத்துதான் நான் பிழைப்பு நடத்துகிறேன்.. காரின் சீட்டெல்லாம் வீணா போச்சே.. அடுத்த பயணிகளை நான் எப்படி இதில் ஏற்றுவேன்?" என்று கேட்கிறார்.
ஒருபுறம் டிரைவர் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எண்ணி பதறிக்கொண்டிருக்கும்போது, அந்த பெண் எதை பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய செல்போனை பயன்படுத்திக்கொண்டே அலட்சியமாக பதிலளிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது..
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதிலிருந்து மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது..
கிளம்பியது விவாதம்
இந்தச் சம்பவம் எங்கு நடந்தது அல்லது அந்தப் பெண்ணின் பெயர் என்ன போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், பயணிகளின் பொறுப்புணர்வு மற்றும் டிரைவர்களின் உரிமைகள் குறித்து இது ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது.. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் உழைப்பையும் உடமையையும் மதிக்க வேண்டும் என்று இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
பலரும் அந்தப் பெண்ணின் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.. "பணம் கொடுத்து பயணம் செய்கிறோம் என்பதற்காக அடுத்தவரின் உடமையைச் சேதப்படுத்தவோ அல்லது அசுத்தப்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை" என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்..
ஆனால் அதே சமயம், அந்த பெண்ணுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு இருந்திருக்கும்.. யாராவது இப்படி வேண்டுமென்றே செய்வார்களா?" என்றும் அப்பெண்ணுக்காக பரிந்து பேசி கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்...!!












Click it and Unblock the Notifications