சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

TNPSC அலர்ட்.. நம்பாதீங்க யாரும், அது போலி ரிசல்ட்.. புரோக்கர்களிடம் ஜாக்ரதை.. டிஎன்பிஎஸ்சி வார்னிங்

சோஷியல் மீடியாவில் வரும் டிஎன்பிஎஸ்சி போலி பட்டியலை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வு முடிவு குறித்து, சோஷியல் மீடியாவில் வரும் போலி பட்டியலை யாரும் நம்ப வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது.

இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு துறை சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்தியது.

Dont trust the TNPSC Combined Exam Results circulating on social media, TNPSC Alert

அந்தவகையில், ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, ஜூலை 2ல் நடந்தது.. இந்த ரிசல்ட் வந்துவிட்டதாக கூறி, ஒரு லிஸ்ட் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிவிட்டது.. இறுதியில் அது போலி என தெரியவந்ததையடுத்து, டிஎன்பிஎஸ்சியே அதுகுறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதாக பரவும் அப்படிப்பட்ட போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு.. 3.5 லட்சம் பேர் பங்கேற்பு..என்னென்ன கட்டுப்பாடுகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு.. 3.5 லட்சம் பேர் பங்கேற்பு..என்னென்ன கட்டுப்பாடுகள்

இது தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது: ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, ஜூலை 2ல் நடந்தது... தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டதாக, போலி பட்டியல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை நம்ப வேண்டாம்... இதுபோன்ற பொய் தகவல்களை பரப்புவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி., நியமனங்கள் அனைத்தும், தேர்வு முடிவு தரவரிசைபடியே நடக்கின்றன. எனவே, பொய்யான வாக்குறுதிகளை கூறி, சட்டத்துக்கு புறம்பாக வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம், விண்ணப்பதாரர்கள் மிகவம் கவனமாக இருக்க வேண்டும்.... டி.என்.பி.எஸ்.சி.,யின் அனைத்து தேர்வு முடிவுகளும், www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதில் மட்டுமே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Dont trust the TNPSC Combined Exam Results circulating on social media, TNPSC Alert
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X