தப்பு தப்பாக தமிழ்த் தாய் வாழ்த்து.. தவறிய திராவிட நல் திருநாடு! வெகுண்டெழுந்த தமிழகம்.. பணிந்த டிடி
சென்னை: டிடி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பங்கேற்ற போது தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது ஏற்பட்ட குளறுபடியால் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கவனச் சிதறலால் ஒருவரி தவற விடப்பட்டதாகவும், இதனால் ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தூர்தர்ஷன் தமிழ் விளக்கம் அளித்துள்ளது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் ”தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகளை விட்டுவிட்டு பாடினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநரை திருப்தி படுத்துவதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு ’திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்”ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என கூறியிருந்தார்.
மேலும், இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என கூறினார். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தன. இந்நிலையில் ஆளுநருக்கும் இந்த நிகழ்வுக்கும் தொடர்பில்லை எனவும், அவர் பங்கேற்பாளரே தவிர நிகழ்ச்சியை நடத்தியது டிடி தொலைக் காட்சி தான் என ஆளுநரின் ஊடக ஆலோசகரான திருஞானசம்பந்தம் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், டிடி தொலைக்காட்சி இதுதொடர்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டுமென ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் விமர்சனத்திற்குள்ளான நிலையில், கவனச் சிதறலால் ஒருவரி தவற விடப்பட்டதாகவும், இதனால் ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தூர்தர்ஷன் தமிழ் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக டிடி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள விளக்கத்தில்,”தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்கள், ஹிந்தி மாத நிறைவுத் திருவிழா மற்றும் தூர்தர்ஷன் சென்னையின் தங்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடும் போது, கவனச்சிதறலால் தவறுதலாக ஒரு வரி விடுபட்டது. இந்த தவறிற்கு எங்களது மன்னிப்பை கோருகிறோம். தமிழ்த் தாய் வாழ்த்தை பாடிய பாடகர்களுக்கு தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்பதை குறிப்பிடுகிறோம். இதனால் தமிழ்நாடு குடியரசுத் தலைவருக்கு ஏற்படுத்திய அசௌகரியத்திற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.” என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்த் தாய் வாழ்த்து குளறுபடி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம்.
-
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications