2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம்
சென்னை: சிலிண்டர் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது... எப்போது விலை குறையும் என்று தெரியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில் சாமானிய மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை ஒரு மிகப்பெரிய ஆறுதலாக இருந்து வருகிறது.. இருந்தாலும், சமீபகாலமாக பல நுகர்வோரின் வங்கி கணக்குகளில் இந்த மானியத் தொகை சரியாக வந்து சேரவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.. இதுபோன்ற சூழலில் எல்பிஜி சிலிண்டர் சப்ஸிடி சரியாக வருகிறதா? அதனை சரிபார்ப்பது எப்படி? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இன்று இல்லத்தரசிகளின் முதன்மையான கவலையாக இருப்பதே கேஸ் சிலிண்டர் விலை உயர்வுதான்.. 1000 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை, நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் மாத பட்ஜெட்டை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது..

இத்தகைய இக்கட்டான சூழலில், மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை என்பது சாமானிய மக்களுக்குக் கிடைக்கும் ஒரு சிறிய பிடிமானம் போன்றது..
2 கேஸ் சிலிண்டர்
இரண்டு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கும் மானியம் உண்டு, ஆனால் ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சம் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியத் தொகை வழங்கப்படும். உங்கள் இரண்டு சிலிண்டர் இணைப்புகளும் ஒரே ஆதார் மற்றும் வங்கி கணக்குடன் 'NPCI' மூலம் சரியாக இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வது அவசியம். ஒருவேளை உங்கள் குடும்ப ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், இரண்டு சிலிண்டர் வைத்திருந்தாலும் உங்களுக்கு மானியம் கிடைக்காது.
மானியத் தொகை மாயமா
ஆனால், பலரும் கவனிக்காத ஒரு விஷயம், உங்கள் கணக்கிற்கு வரவேண்டிய மானியத் பணம் முறையாக வந்து சேர்கிறதா அல்லது இடையில் எங்காவது மாயமாகிறதா? என்பதுதான்..
சமீபகாலமாக பல நுகர்வோர் எழுப்பும் மிகப்பெரிய புகார் இதுவாகத்தான் உள்ளது.. அதாவது சிலிண்டர் புக் செய்து டெலிவரி எடுக்கப்பட்ட பிறகு, மானியம் அனுப்பப்பட்டதாக மெசேஜ் வருகிறதாம்.. ஆனால், வங்கி கணக்கை சரிபார்த்தால் ஒரு பைசா கூட ஏறவில்லையாம்..
"மானியம் தானே, போனால் போகிறது" என்று அலட்சியமாக இருப்பது உங்கள் பாக்கெட்டில் இருந்து நீங்களே பணத்தை எடுத்து வீசுவதற்குச் சமமாகும்.. இண்டேன் எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் அல்லது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் என நீங்கள் எந்த நிறுவனத்தின் கஸ்டமராக இருந்தாலும் சரி, இந்த சிக்கல் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது..
மானியம் ஏன் தடைபடுகிறது? செய்ய வேண்டியது என்ன?..
இதற்கு பின்னால் பல தொழில்நுட்பக் காரணங்கள் உள்ளன.. மிக முக்கியமாக, உங்கள் எல்பிஜி இணைப்புடன் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.. இதில் சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்லது அல்லது எண்களில் தவறு இருந்தால் கூட பணம் வேறு கணக்கிற்கு செல்லவோ அல்லது முடங்கிப் போகவோ வாய்ப்புண்டு..
அதேபோல், உங்கள் வங்கி கணக்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்தாலும் மானியம் வந்து சேராது.. இதுவும் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமாகும்..
இன்னென்றையும் கவனிக்க வேண்டும்.. e-KYC புதுப்பித்தல்.. கேஒய்சி விவரங்கள் காலாவதியாகி இருந்தால், உடனடியாக உங்கள் கேஸ் ஏஜென்சியைத் தொடர்புகொண்டு கைரேகை அல்லது முக அடையாளப் பதிவு மூலம் அதனை புதுப்பித்து கொள்ள வேண்டும்.. இது தவிர, ஒரு நிதியாண்டில் உங்கள் குடும்ப வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தாலோ அல்லது நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தாலோ உங்களுக்கு மானியம் கிடைக்காது என்பது அரசின் விதிமுறை..
உங்கள் உரிமையை மீட்பது எப்படி?..
மேற்கண்ட பிரச்சனைகள் இருக்கிறதா? மானிய நிலைமை அறிந்து கொள்ள எங்கும் அலைய தேவையில்லை.. செல்போனிலேயே 'Mylpg.in' என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டில், உங்களது 17 இலக்க எல்பிஜி அடையாள எண்ணை கொண்டு உள்நுழைந்தால், கடந்த சில மாதங்களாக நீங்கள் வாங்கிய சிலிண்டர்கள் மற்றும் அதற்கு வழங்கப்பட்ட மானியத் தொகை குறித்த மொத்த ஜாதகத்தையும் பார்த்துவிடலாம்..
அங்கு "மானியம் வழங்கப்பட்டது" என இருந்து, உங்கள் வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்றால், உடனடியாக உங்கள் வங்கிக் கிளையை அணுகி 'NPCI' (National Payments Corporation of India) மேப்பிங் சரியாக உள்ளதா என்று விசாரிக்க வேண்டும்..
சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டவுடன் வரும் மெசேஜ் ரொம்பவே முக்கியம்.. அதை எப்போதும் தவிர்க்க கூடாது.. அதில் மானியத் தொகை எவ்வளவு, எந்த வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது என்ற விவரம் துல்லியமாக இருக்கும்.. இன்று சில நிமிடங்கள் செலவழித்து உங்கள் கணக்கை சரிபார்ப்பது, உங்கள் கடின உழைப்பில் வந்த பணம் உங்களிடமே தங்குவதை உறுதி செய்யும்.. அரசு தரும் இந்தச் சலுகை உங்கள் உரிமையாகும், அதனைச் சரியாகப் பெறுவது உங்கள் கடமையாகும்..!!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications