சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யா நறுக்.. சிடி ஸ்கேன் கட்டணம் எவ்ளோ? மருத்துவமனைகளுக்கு பறந்த வேண்டுகோள்
சென்னை: நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், மகிழ்மதி இயக்கம், நோயாளிகளுக்கு ஆதரவு சேவைகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனியார் மருத்துவமனைகளுக்கு மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினையும் டாக்டர் திவ்யா விடுத்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா விரைவில் அரசியலிலும் களமிறங்க போவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. டாக்டர் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார்.

இந்திய அரசின் பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்திவரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் (TAPF) நல்லெண்ணத் தூதராக உள்ளார்.
குறைபாடுகள்: "மகிழ்மதி" என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார்.. தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சேவை செய்யும் டாக்டர் திவ்யா, தமிழ்நாடு மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

"தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும்" என்று பலமுறை வீடியோ வெளியிட்டு கோரிக்கையை விடுத்தவாறே இருப்பவர் டாக்டர் திவ்யா. இப்படிப்பட்ட சூழலில், தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று வைத்திருக்கிறார்.
செலவுகள்: அந்த கோரிக்கையில் உள்ளதாவது: "ஒரு வருடத்தின் மருத்துவ செலவுகள் 63 மில்லியன் இந்தியர்களை வறுமையில் தள்ளுகின்றன. எம்ஆர்ஐ, சிடி, அல்ட்ராசவுண்ட் போன்ற கண்டறியும் இமேஜிங் சேவைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இந்த விலைகள் சாமானியர்களால் முடிவதில்லை.

நான் "மகிழ்மதி" இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கினேன். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சத்தான உணவை இலவசமாக வழங்குகிறோம். அத்துடன், நாங்கள் நோயாளிகளுக்கு ஆதரவு சேவைகளையும் வழங்குகிறோம்.
சிறந்த இயந்திரங்கள்: எம்ஆர்ஐ மற்றும் இமேஜிங் சேவைகளின் விலையைக் குறைக்க ஒரு தனியார் மருத்துவமனையைக் கோரியபோது, "எங்களிடம் சிறந்த இயந்திரங்கள் உள்ளன. ஏழைகள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும், இயந்திரங்களைப் பராமரிக்க எங்களுக்கு பணம் தேவை" போன்ற பரிதாபமான விளக்கங்களை நிர்வாகம் எங்களுக்கு வழங்கியது.

எனவே, தனியார் மருத்துவமனைகள் எம்.ஆர்.ஐ. மற்றும் பிற இமேஜிங் சேவைகளின் விலையில் 30 சதவீதம் குறைக்கக்கோரி எனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்களுடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது" என்று டாக்டர் திவ்யா தெரிவித்துள்ளார்.

மதிக்கிறோம்: அதுமட்டுமல்ல, திவ்யா தொடர்ந்து சொல்லும்போது, அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, "எங்களுக்கு பணம் முக்கியம் அல்ல, மக்கள் ஆரோக்கியம் தான் முக்கியம்" என்கிறார். உங்கள் அறிக்கையை மதிக்கிறோம் என்றும் திவ்யா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications