ஹோமியோபதி இருக்க கவலை எதற்கு.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது போதும்.. டாக்டர்.ஞானசம்பந்தம்
சென்னை: ஹோமியோபதி மருத்துவத்தில் ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மருந்து மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனக் கூறுகிறார் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் ஞானசம்பந்தம்.
மேலும் உடல் உறுப்புகளை இயங்கவைக்கக்கூடிய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி இயற்கையாகவே மனித உடலுக்கு ஆற்றலை தரும் சக்தி ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மருந்துக்கு உள்ளதாக தெரிவிக்கிறார்.
கொரோனாவுக்கு உலகம் தழுவிய அளவில் மருந்து கண்டறியும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதே கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள இப்போது இருக்கும் ஒரே வழியாகும்.

சுகாதாரத்துறை அனுமதி
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வரும் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மருத்துவமுறைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் சித்தாவில் கபசுரக்குடிநீரும், ஹோமியோபதியில் ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மருந்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனிடையே கபசுரக் குடிநீர் பொதுமக்கள் மத்தியில் பரிச்சயம் பெற்ற நிலையில், ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மருந்து மக்களிடையே பரிச்சயம் பெறவில்லை.

ஹோமியோபதி
இந்நிலையில் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் மருத்துவர் ஞானசம்பந்தம் ஆர்சனிக் ஆல்பம் 30 சி மருந்து தொடர்பாக சில விளக்கங்களை அளித்துள்ளார். அதில், இந்த மருந்தால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது என்றும், மனிதனின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கிறார். மேலும், காலை மாலை என மூன்று நாட்கள் வீதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை எடுத்துக்கொண்டால் நோய்கிருமியை எதிர்த்து போராடும் ஆற்றல் உடலில் இயற்கையாகவே ஏற்படும் எனக் கூறுகிறார்.

தோற்றுப்போகும்
ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் மனித உடலில் நோய்கிருமிகளால் எதுவும் செய்ய முடியாது என்றும், நோய் எதிர்ப்பு ஆற்றலில் நோய்கிருமிகள் காணாமல் போய்விடும் எனவும் நம்பிக்கை அளிக்கிறார் மருத்துவர் ஞானசம்பந்தம். தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட பதிவுபெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளதாகவும் அவர்களை முறையாக அணுகி இந்த மருந்தை உட்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்துகிறார்.

தொடர்பு கொள்ளுங்கள்
பொதுமக்களுக்கு உதவக்கூடிய தன்னார்வலர்கள் முறையாக தங்களை அணுகி ஆர்சனிக் ஆல்பம் 30 சி மருந்தை பெற்று பொதுமக்களுக்கு விநியோகிக்கலாம் என்றும், இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடலில் அதிகரிக்கச் செய்யலாம் எனவும் தெரிவிக்கிறார். மேலும், இது தொடர்பாக மருத்துவர் ஞானசம்பந்தம் கூறும் தகவல்களை கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து விவரமாக அறிந்துகொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications