சென்னையில் வீடு கட்டுபவர்கள் கவனத்திற்கு! கட்டுமான கழிவுகளை அகற்ற வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்னை: சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறை, நடப்பு 2025 ஆம் ஆண்டுக்கான கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவு மேலாண்மைக்கான வரைவு வழிக்காட்டுதல்களை https://chennaicorporation.gov.in/gcc என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சென்னையில் கட்டிட கழிவு மேலாண்மைக்கான வரைவு வழிகாட்டுதல் பற்றி கருத்து சொல்பவர்கள் 30 நாட்களுக்குள் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதற்கு ஒரு காரணமாக கழிவுகள் அமைந்துவிடுகின்றன. குப்பைகள், கட்டிட கழிவுகள் மற்றும் இதர கழிவுகளினால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதில் குப்பைகளை மாநகராட்சி அகற்றி வருகிறது. ஆனால் ஒருசில இடங்களில் கட்டிடக் கழிவுகள், நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் போடப்படுகிறது.

இவ்வாறு போடப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் அப்படியே நீண்ட நாட்களாக அங்கேயே கிடக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதனை மாநகராட்சி கண்காணித்து அதற்கு காரணமானவர்கள் மீது அபராதம் வசூலிக்கிறது. இருந்தபோதிலும் இந்த சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி கட்டிட கழிவுகள் அகற்றுவது தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மேலும், சென்னையில் கட்டிட கழிவு மேலாண்மைக்கான வரைவு வழிகாட்டுதல் பற்றி கருத்து சொல்பவர்கள் 30 நாட்களுக்குள் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறை, நடப்பு 2025 ஆம் ஆண்டுக்கான கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவு மேலாண்மைக்கான வரைவு வழிக்காட்டுதல்களை https://chennaicorporation.gov.in/gcc என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
* தெருக்கள், நடைபாதைகள், மழைநீர் வடிகால்கள் பொது இடங்கள் அல்லது காலி மனைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்த ஒரு இடத்திலும் உரிமையாளர்களால் கட்டிடக் கழிவுகள் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் கொட்டக்கூடாது.
* நீரின் போக்கு நிலத்தடி நீர் ரீசார்ஜ் ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் செயலாக்கத் தளங்களாக பெருநகர சென்னை மாநகராட்சியால் பட்டியலிடப்பட்டுள்ள இடங்கள் தவிர, தாழ்வான பகுதிகளில் எந்த விதமான கழிவுகளும் எந்த நேரத்திலும் கொட்டக்கூடாது. விதிமீறல்களுக்கு அவ்வப்போது குறிப்பிட்டபடி அபராதம் விதிக்கப்படும்.
* ஒரு கட்டுமானத் திட்டத்தின் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் / உரிமையாளர்கள் டெவலப்பர்கள் ஆகியோர் அவர்களால் உருவாக்கப்படும் மற்றும் கழிவுகளை அகற்றுதல், செயலாக்கம் ஆகியவற்றிற்கு அவர்களே பொறுப்பாவார்கள். மேலும் திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது பொறுப்பான நபரின் (நபர்கள் பெயரை அவருடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்களுடன் குறிப்பிட வேண்டும்.
* 7 நாட்களுக்குள் அகற்றப்படாமல் இருக்கும் கழிவுகள் (குறிப்பாக கட்டுமான மற்றும் இடிப்பாட்டுக் கழிவுகள்) பெருநகர சென்னை மாநகராட்சியால் அகற்றப்படும். மேற்கண்ட கழிவுகள் அகற்றலுக்கான செலவு, அந்தந்த வார்டு பொறியாளர்களால், அபராதத்துடன் வசூலிக்கப்படும்.
* எந்தவொரு கட்டிடம் கட்டுவதற்கு அல்லது இடிக்க விரும்பும் உரிமையாளர்கள் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் மேலாண்மை திட்ட முன் அனுமதியைப் பெற வேண்டும். அனைத்து கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் விண்ணப்பங்களும் கட்டிட மற்றும் இடிபாட்டு கழிவுகள் எதிர்பார்க்கப்படும் தன்மை மற்றும் அளவைக் குறிப்பிட்டு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். அத்தகைய விண்ணப்பங்கள் அனைத்தும் 15 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்படும்.
* உரிமையாளர் கட்டுமான நிறுவனம் அல்லது கூட்டு மேம்பாட்டாளர் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்தால் திட்ட அனுமதி வழங்கப்படும்.
* கட்டிட கழிவுகள் உருவாக்குபவர்கள், மிகச்சிறிய அளவில் கழிவு, சிறிய அளவு கழிவு, பெருமளவு கழிவு உருவாக்குபவர்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
* நீர்நிலைகள், சாலைகள், பொது இடங்களில் கட்டிட கழிவு கொட்டக்கூடாது.
* ஆக்கிரமிப்பாளர்கள், உரிமையாளர்கள் ஆகியோரால் உருவாக்கப்படும் கழிவுகளை அகற்றுவதற்கு அவர்களே பொறுப்பாவார்கள்.
* கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை ஈரக் கழிவுகள், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் என வேறு எந்த கழிவுகளுடனும் கலக்கக்கூடாது.
* இந்த வழிகாட்டுதல் குறித்து, கட்டுமான நிறுவனங்கள், கட்டிடங்களின் உரிமையாளர்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை 30 நாட்களில் தெரிவிக்கலாம்.
* கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் கருத்துகளை அனுப்பலாம்.












Click it and Unblock the Notifications