அழைப்பிதழில் பெயர் போட்டும் அமைச்சர்கள் வரவில்லை! வருந்திய திருநாவுக்கரசு! சமாதானம் செய்த ஸ்டாலின்!
சென்னை: தனது மகன் திருமண அழைப்பிதழில் பெயர் போடப்பட்டும் அமைச்சர்கள் பலரும் திருமண விழாவுக்கு வராததை ஸ்டாலினிடம் நேரடியாக ஓபன் ஸ்டேஜில் சுட்டிக்காட்டி, வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு.
''நீங்கள் வருத்தப்பட வேண்டாம்... எல்லோருக்கும் சேர்த்துதான் நான் வந்திருக்கிறேனே, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்'' எனக் கூறி திருநாவுக்கரசை சமாதானம் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்ல திருமண விழாவில் இது தொடர்பாக முதல்வர் பேசியதாவது;

''அண்ணன் திருநாவுக்கரசு எப்பொழுதும் - எதையுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். உள்ளொன்று வைத்து வெளியொன்று பேச மாட்டார். அதனால்தான் நன்றியுரை ஆற்றுகிறபோது இந்த அழைப்பிதழில் வெளியிடப்பட்டிருக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் வரவில்லை என்பதை மனதில் ஏற்றுக்கொண்டு அந்த வருத்தத்தை கொஞ்சம் இங்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். ''
''அவர் எனக்கு சால்வை அணிவித்தபோது, பட்டாடை அணிவித்தபோது நான் சொன்னேன். "நீங்கள் வருத்தப்பட வேண்டாம்... எல்லோருக்கும் சேர்த்துதான் நாங்கள் வந்திருக்கிறோமே, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்". சரி... சரி என்று தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அது மட்டுமல்ல, இன்றைக்குத் திருமண நிகழ்ச்சிகள் நிரம்ப நடந்து கொண்டிருக்கிறது. பல அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பல நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி அவர்களும் சென்றிருக்கிறார்கள்.''
''அது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் இருக்கிறது. கவலைப்படாதீர்கள்... வராதவர்கள் எல்லாம் மாலையில் வருவார்கள்... மணமக்களை வாழ்த்துவார்கள். நீங்களே இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கிறீர்கள். அதனால் அவர் கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.''
''இதுவரை கணக்கெடுத்துப் பார்த்தீர்கள் என்றால் 4000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர் நம்முடைய அண்ணன் திருநாவுக்கரசு.
திராவிட இயக்கத்தையோ, கலைஞரைப் பற்றியோ யாராவது லேசாக விமர்சித்தால் போதும், பொறுத்துக் கொள்ள மாட்டார் அண்ணன் திருநாவுக்கரசு. உடனே அதற்குத் தகுந்த பதிலை, தகுந்த விமர்சனத்தை எழுதினால்தான் அவருக்கு நிம்மதி வரும். அதனால்தான் திராவிட இயக்கத்தின் தீரர் என்று இன்றைக்கு நம்மால் அவர் அழைக்கப்படுகிறார். ''
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications