சென்னையில் குடிநீர் இங்கெல்லாம் அடுத்த 2 நாளைக்கு கட்.. மெட்ரோ லாரிகளை முன்பதிவு செய்வது எப்படி?
சென்னை: நாளை மற்றும் நாளை மறுநாள் நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தின் இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 750 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன் 750 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயை இணைக்கும் பணி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஸ்டெர்லிங் சாலையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை (31-ம் தேதி) இரவு 7 முதல் செப்.1-ம் தேதி மதியம் 3 மணி வரை நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இப்பகுதி பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரி மூலமாக குடிநீரை பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
https://dfw.chennaimetrowater.in/#/index என்ற லிங்கில் உள்ளே சென்றால் அதில் நீங்கள் மண்டலம், வார்டு, பில் நம்பர் , சப் கோடு ஆகியற்றை கேட்கும். அதற்கு முதலில் பதிவு ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். உங்கள் நுகர்வோர் எண் கொடுத்துபதிவு செய்தால், உங்கள் மொபைலுக்கு ஒடிபி கேட்கும். அப்படி கொடுத்துவிட்டால், உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்பதை செலக்ட் செய்து தண்ணீரை முன்பதிவு செய்யலாம்.
தண்ணீருக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். 6000 லிட்டர் தண்ணீருக்கு 475 ரூபாயும் 9 ஆயிரம் லிட்டருககு 700 ரூபாயும், 16 ஆயிரம் லிட்டருக்க 1200 ரூபாயும் கட்ட வேண்டும். கமர்ஷியல் என்றால் 6 ஆயிரம் லிட்டருக்கு 735 ரூபாயும், 9 ஆயிரம் லிட்டருக்கு 1050 ரூபாயும், 16 ஆயிரம் லிட்டருக்கு 1785 ரூபாயும் கட்ட வேண்டியதிருக்கும். பணம் கட்டி தண்ணீரை புக்கிங் செய்த பிறகு கேன்சல் செய்ய முடியாது. எந்த நேரம் தண்ணீர் லாரி வரும், லாரி டிரைவரின் நம்பர் ஆகியவை எஸ்எம்எஸ் ஆக அனுப்பி வைக்கப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications