வெயில் காலம்: மண் பானையா? காப்பர் பாட்டிலா? எதில் வைத்து தண்ணீர் குடிப்பது சிறந்தது.. விவரங்கள் இதோ
சென்னை: செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீர் குடிப்பது நல்லதா? அல்லது மண்பானையில் உள்ள தண்ணீர் நல்லதா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. எனவே அது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போதைய நவீன கால கட்டத்தில் மக்கள் பலரும் நம் முன்னோர்கள் கடைபிடித்த சில பழக்க வழக்கங்களை பின்பற்றவிரும்புகிறார்கள். குறிப்பாக உணவு பொருட்களில் பலருக்கும் முன்னோர்கள் கடைபிடித்த முறைகளில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதாவது, மண்பாண்ட சமையல், வாழை இலையில் சாப்பிடுவது, விறகு அடுப்பில் சமைக்கப்படும் உணவில் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதை வைத்து சில ஓட்டல்களில் கூட இப்படி உணவுகள் தற்போது கிடைக்கின்றன. அதேபோல் இப்போதும் பலரும் செப்பு பாத்திரங்களின் பயன்பாடுகளும் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக காப்பர் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் இருப்பதாக சொல்லப்படுவதால் இப்பொதெல்லாம் செம்பு பாட்டில்களை பலரும் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.
அலுவலகத்திற்கு கூட செம்பு பாட்டிலைக் கொண்டு போய் தண்ணீர் பிடித்து குடிக்கிறார்கள். ஆன்லைனினும் செம்பு பாட்டில்கள் மற்றும் பாத்திரங்களின் விற்பனை அதிகரிக்கத்து இருக்கிறது. ஆனாலும் மக்களுக்கு தற்போது ஒரு சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. அதாவது செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீர் குடிப்பது நல்லதா? அல்லது மண்பானையில் உள்ள தண்ணீர் நல்லதா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. எனவே அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சொல்லப்போனால்.. இரண்டிலுமே நன்மைகளும் இருக்கின்றன. தீமைகளும் இருக்கின்றன. தாமிரம் உடலில் உள்ள ஒரு அங்கமாகும். உடலில் இதயத்திற்கு ஆக்சிஜனை கடத்தும் சிவப்பணுக்கள் உருவாவதற்கும் மற்றும் நரம்பு செல்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தாமிரம் உதவுகிறது.
காப்பர் பாட்டிலில் வைத்து தண்ணீர் குடிப்பதால் நன்மைகள்:
* உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளை குறைப்பதற்கு காப்பர் உதவுவதாக அமெரிக்கவில் உள்ள கேன்சர் சொசைட்டி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* ஹீமோகுளோபினை உருவாக உதவுகிறது. அனீமியா ஏற்படாமலும் தடுக்க உதவுகிறது.
* காப்பர் பாட்டிலில் வைத்து தண்ணீர் குடிப்பது ஜீரணம் எளிதில் ஆவதற்கும் உதவுகிறது.
* இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. எடை குறைக்க உதவுகிறது.
* வீக்கமடைந்த மூட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது.
* தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.
* கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மண்பானையில் வைத்து தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
* மண்பானையில் வைக்கப்படும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சி அடைகிறது. இது நமது உடலை குளுமையாக வைத்திருக்க உதவும்.
* நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் அமிலங்களை சமப்படுத்த உதவுகிறது. இதனால், உடலில் பி.எச் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.
* களிமண் பானை தண்ணீரை தினமும் குடிப்பதால், மெடாபோலிசத்தை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
* மண்பானை தண்ணீரின் குளிர்ச்சி வெப்பத்தாக்கு ஏற்படுவதில் இருந்து ஒருவரை பாதுகாக்க உதவும்.
* வெப்பத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
* இயற்கையான நீர் சுத்திகரிப்பான்கள் போல மண்பாண்டத்தில் வைத்து குடிக்கப்படும் தண்ணீர் இருக்கிறது.
* மண்பானைகளில் உள்ள நுண் துளைகள் மூலம் தண்ணீரில் மாசுகள் தடுக்கப்படுகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications