எதிர்பார்க்காத ஷாக்.. 2021ல் இருந்ததை விட.. அதள பாதாளத்திற்கு போன பெட்ரோல் டீசல் விலை.. டிரம்ப் திக்
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உலகளாவிய பரஸ்பர வரி கட்டணங்கள் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தொடர் வர்த்தக சரிவு காரணமாக அமெரிக்க கச்சா எண்ணெய் விலை இன்று ஒரு பீப்பாய் $ 60 க்கு கீழே குறைந்தது.
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் கச்சா எண்ணெய்க்கான மதிப்பு 3%க்கும் மேல் சரிந்தது. தற்போது ஒரு பீப்பாய் $59.78க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் மட்டும் 6% சரிவு ஏற்பட்டு உள்ளது. ஏப்ரல் 2021 க்குப் பிறகு மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் டீசல் விலையில் இது எதிரொலிக்கவில்லை. சென்னையில் இன்றைய டீசல் விலை லிட்டருக்கு ₹92.39 ஆக உள்ளது, இது நேற்றைய விலையான ₹92.52 உடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில், ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன, டீசல் விலை தமிழ்நாடு முழுக்க ₹92.39 முதல் ₹92.81 வரை உள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹100.80 ஆக உள்ளது, இது நேற்றைய விலையான ₹100.93 உடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில், ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன, இதன் விலை ₹100.80 முதல் ₹101.23 வரை உள்ளது.
வர்த்தக போர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதுதான் உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை சரிய காரணம் ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பதிலடி வரிகள் என்றால் என்ன?
முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம் . அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடும் பாதிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை இரசாயனங்கள் துறை, உலோக பொருட்கள் துறை, நகைகள் துறை, மேலும் ஆட்டோமொபைல்கள் துறை, மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் துறை ஆகியவை பாதிக்கப்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக இரசாயனங்கள், உலோக பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஆட்டோமொபைல் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஏற்றுமதி 15 சதவிகிதம் வரை பாதிக்கும், மருந்து ஏற்றுமதி 30 சதவிகிதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க பொருட்கள் மீதான வரி குறைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்திய நிலையில், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா இந்தியாவின் வரி விதிப்பை விமர்சனம் செய்த நிலையில்.. இந்தியா வரியை குறைக்க தொடங்கி உள்ளது. போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிரம்ப் சொன்னதை கவனிச்சீங்களா?
இதற்கு காரணமாக இருந்த டிரம்ப் நேற்று சொன்னதுதான் இன்னும் பலரையும் அதிர்ச்சி ஆக்கி உள்ளது. மார்க்கெட் சரிவது பெரிய விஷயம் அல்ல. மார்க்கெட் இனி உயரும். எதிர்பார்க்காத மிகப்பெரிய உயரத்தை மார்க்கெட் அடைய போகிறது. மார்க்கெட் சர்ரென புதிய உச்சத்தை அடையும் என்று டிரம்ப் கூறி உள்ளார். ஆனால் அவர் கூற்றிற்கு எதிர்மாறாக மார்க்கெட் சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும். அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications