மின்வாரியத்தின் முக்கிய அப்டேட்.. சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்.. மக்களே கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மின்வாரியம் சார்பில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று (ஆகஸ்ட் 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பள்ளிக்கரணை, அடையாறு, ஐடி காரிடார் உள்பட 7 பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

சென்னையில் சில இடங்களில் இன்று மின்வாரியம் சார்பில் பராமரிப்பு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

chennai eb power cut

சென்னையில் 08.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

மடிப்பாக்கம்: லட்சுமி நகர், குபேரன் நகர் 10 மற்றும் 12வது தெரு, ராம் நகர் தெற்கு 17 வது தெரு, நங்கநல்லூர் நேரு காலனி பகுதி, 5வது பிரதான சாலையின் ஒரு பகுதி, 39-42 வது தெரு, கன்னியா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலையின் ஒரு பகுதி, வேம்புலியம்மன் கோவில் தெரு, 4வது பிரதான சாலையின் ஒரு பகுதியில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

புழல் - அடையாளம்பட்டு: புழல் ஏரியாவை பொறுத்தவரை புழல் பகுதி குடிநீர் வாரியம் மற்றும் புழல் மத்திய சிறை III விளாங்காடு பாக்கம், காந்தி பிரதான சாலை, வெஜிடேரியன் வில்லேஜ், சக்திவேல் நகர், சிவராஜ் பிரதான சாலை மற்றும் தமிழன் நகரில் மின்தடை ஏற்பட உள்ளது. அடையாளம்பட்டு பகுதியை பொறுத்தவரை மில்லினியம் டவுன் பேஸ் I, II, III, பாடசாலை தெரு, கம்பர் நகர் I முதல் IV, காசா கிராண்ட், கேஜி குளக்கரை தெரு, வானகரம் சாலை, டிடி மேத்யூ சாலை மற்றும் 200 அடி சர்வீஸ் சாலையில் ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.

செம்பாக்கம் - பூவிருந்தவல்லி: செம்பாக்கம் பொறுத்தவரையில் வேளச்சேரி பிரதான சாலை, மசூதி காலனி, துர்கா காலனி, ரங்கா காலனி, முக்தா நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. பூவிருந்தவல்லி ஏரியாவை எடுத்து கொண்டால் பூவிருந்தவல்லி பை பாஸ் சாலை மற்றும் கோல்டன் ஹோம்ஸ் இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

கேகேடி நகர்: ஆண்டாள் நகர், அன்னை தெரசா, ஐஸ்வர்யா நகர், அபிராமி அவென்யூ, மணலி சாலை, லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3 தெருக்கள், தென்றல் நகர் 1 முதல் 8 தெருக்கள், வேதாந்த முருகப்பன் தெரு, அன்னை அவென்யூ 1 முதல் 3 தெருக்கள், எஸ்ஆர் நகர், ஜெயலட்சுமி நகர், பத்ரகிரி நகர், ராகவேந்திரா நகர், கணேஷ் நகர், சுகந்தம்மாள் நகர், பாலாஜி நகர், சாக்சி நகர், கேஎம்ஏ கார்டன் பகுதி, டிஎச் சாலை, கேகேடி நகர் பிளாக் 1 முதல் 9 வரை, சிட்கோ இன்டல் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் ‛பவர்கட்' ஏற்படும்.

மேலும் ஏகேஎம் நகர், தாமோதரன் நகர், கோல்டன் வளாகம், ஜேஜேஆர் நகர், எஸ்எம் நகர் பிளாக் 25 முதல் 88 வரை, சாமந்திப்பூ காலனி, மல்லிகை பூ காலனி, ஆர்ஆர் நகர், கேஏ 4வது தெரு, வியாசர்பாடி புதுநகர், மேற்கு தொகுதி, மேற்கு கிராஸ், மத்திய குறுக்கு முதல் 14 தெருக்கள், 5 முதல் 9 வது குறுக்கு தெரு, மத்திய மற்றும் மேற்கு அவென்யூ சாலை, சிஎம்டபிள்யூஎஸ்எஸ்பி பம்பிங் ஸ்டேஷன், 4, 7 மற்றும் 8 வது பிரதான சாலை, வடக்கு அவென்யூ சாலை மற்றும் பெரியார் குடியிருப்புகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+