சென்னையில் விமான நிலையத்தில் இன்று மெட்ரோ ரயில் ரத்து.. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அறிவிப்பு
சென்னை: சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து மக்கள் மெட்ரோ ரயிலில் விரைவாக பயணித்து வருகின்றனர்.

தற்போது சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் ‛‛தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விம்கோ நகர் டெப்போ முதல் மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கி வருகிறது. இந்த சிரமத்துக்கு வருந்துகிறோம்'' என தெரிவித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை நிறுத்தத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்த பிறகு மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications