அப்பா ஜெயிச்சிட்டீங்க! போனில் பேசியதை சொன்ன போதே விம்மி வெடித்த துரை வைகோ.. தேற்றிய அன்பில்
சென்னை: திருச்சியில் நீங்கள் கேட்ட வெற்றியை நான் பெற்றுத் தந்துவிட்டேன் என வைகோவிடம் பூரிப்புடன் தெரிவித்ததாக கூறிய துரை வைகோ பிரஸ் மீட்டில் கண்ணீர் விட்டு அழுதார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றுள்ளது. அந்த வகையில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட்டார். தங்களுக்கு பம்பரம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் மதிமுக கோரிக்கை விடுத்தது.

ஆனால் கோர்ட்டுக்கு போயும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. இதனால் தனி சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. இதனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு மதிமுகவுக்கு திமுக தலைமை நிர்பந்தித்தது. ஆனால் துரை வைகோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் துரை வைகோ மதிமுகவிலிருந்து அவர் வகிக்கும் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தால்தான் உண்டு.
இதை ஏற்க மறுத்த துரை வைகோ, சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்தார். மேலும் தான் அரசியலுக்கு வந்ததே தனது தந்தைக்காகவும் எண்ணற்ற கட்சித் தொண்டர்களுக்காகவும்தான் என கண்ணீர் விட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு தீப்பெட்டி சின்னம் கிடைத்தது. இந்த சின்னத்தை கொண்டு போய் சேர்க்க கடுமையாக போராடினார். அவருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷும் கே.என்.நேருவும் துணையாக இருந்து பிரச்சாரத்தை செய்தனர்.
தேர்தல் முடிந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகோவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு தோள் பட்டையில் அறுவை சிகிச்சை செய்ய சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக துரை வைகோ தெரிவித்திருந்தார். அது போல் வைகோவும் வீடியோ வாயிலாக தனது தொண்டர்களுக்கு தனது உடல்நலம் தேறியதை அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று லோக்சபா தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து பல்வேறு தொகுதிகளில் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் திருச்சி லோக்சபா தொகுதியில் துரை வைகோ 5,42,213 வாக்குகளை பெற்று வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையா 2,29,119 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷுடன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவ்ர கூறுகையில் அப்பா எனக்கு போன் செய்தார், நான் அவருக்கு வாழ்த்துகள் என்றேன். அதற்கு அவர் , நான்தான்ப்பா உனக்கு சொல்லணும்" என கூறி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது நான் இந்த தேர்தலில் எனக்காக நான் போட்டியிடவில்லை, உங்களுக்காகவும் நம் கட்சிக்காகவும் கட்சி தோழர்களுக்காகவும் போட்டியிட்டேன். நீங்கள் கேட்ட வெற்றியை நான் பெற்றுத் தந்துவிட்டேன் என்றேன். இவ்வாறு துரை வைகோ அழுதுக் கொண்டே கூறினார். அப்போது அவரை அமைச்சர் அன்பில் மகேஷ் தோளில் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications