திமுகவுடன் இணைகிறதா மதிமுக? துரை வைகோ கொடுத்த ரியாக்சன் -திருமுருகன் காந்தி பதிவிட்ட உடனே நெகிழ்ச்சி
சென்னை: மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தெரிவித்து இருக்கும் நிலையில், அதற்கு எதிராக பதிவிட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நன்றி தெரிவித்து இருக்கிறார்.
மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று தெரிவித்து உள்ள நிலையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மதிமுகவுக்கு ஆதரவாக பதிவிட்டு இருந்தார். அதில், "வெற்றி, தோல்வி, பணபலம், அரசியல் அதிகாரம் என்பதைக் கடந்து எளிய மக்களுக்காக குரல் எழுப்ப தமிழகத்தின் அரசியல் தேவை 'மதிமுக'.

வெற்றி தோல்வி மட்டுமே ஒரு இயக்கத்தின் வரலாற்று இருப்பை உறுதி செய்துவிடாது. அரசியல் போக்கில் தாக்கத்தை கொண்டு வருவதில் அதனுடைய பங்கை பொறுத்தும், எத்தகைய மாற்றத்திற்காக போராடுகிறது என்பதுவுமே அதன் முக்கியத்துவத்தை சொல்லும். மதிமுக என்பது உருவாகி கடந்த 30 ஆண்டுகளில் அது வலியுறுத்திய அரசியலே அதனை பிற திராவிட கட்சிகளில் இருந்து வேறுபடுத்தியது.
90களில் கூர்மையடைய ஆரம்பித்த ஈழப்போராட்டம், தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகள் எனும் சூழலில் உருவான மதிமுக, பெரிய திராவிட கட்சிகளிலிருந்து வேறுபட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு, NLC, ஈழ விடுதலை போராட்ட நிலைப்பாடு என சூழலியல் அரசியல், தமிழின சார்பு வெளியுறவுக் கொள்கை என தம்மை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பு நிலைப்பாட்டினை எடுத்து போராடியது.
இவ்வகையில் எழுவர் விடுதலை, மீத்தேன் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, முல்லைப்பெரியார் உரிமை மீட்பு, கெயில் குழாய் எதிர்ப்பு என பிற திராவிட தேர்தல் கட்சிகளின் அரசியலை மக்கள் நோக்கி நகர்த்தியது. இவ்விடயங்களில் எவ்வித கொள்கை நிலைப்பாடும் எடுக்காத பிற திராவிட கட்சிகள் மக்களிடமிருந்து அன்னியமாகின. கடந்த 30 வருடங்களில் 2016க்குப் பின்னரே இந்த நிலைப்பாடுகளில் திமுக நிலைப்பாடு எடுக்க முயன்றது.
2010-20 வரையிலான நெருக்கடியான காலகட்டத்தில் போராட்ட அரசியலை கைக்கொண்டு நின்றது மதிமுக. சாஞ்சியில் ராஜபக்சேவை எதிர்கொள்ள தொண்டர் படையை நகர்த்தியது, ஸ்டெர்லைட்டை தடை செய்ய நீதிமன்றம் சென்றது, ப்ரஸ்ஸல்ஸில் பொதுவாக்கெடுப்பை ஈழத்திற்கு கோரியது, புலிகள் மீதான தடைக்கு எதிராக நேரடியாக வழக்காடியது, மூவர் தூக்கை ரத்து செய்ய வழக்காடியது, நியூட்ரினோவிற்கு தடை வாங்கியது என நீதிமன்றப் போராட்டங்கள் மக்கள் திரள் போராட்டத்துடன் இணைந்து நடத்தியது.
கெயில் குழாய்க்கு எதிராகவும், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பிலும் மதிமுகவின் மூத்த பொறுப்பாளர்கள் திரு. கணேசமூர்த்தியும், திரு. மல்லை சத்யாவும் நேரடியாகவே பங்காற்றினர், மல்லை சத்யா சிறையும் சென்றார். இவ்வகையில் அக்கட்சியின் மூத்த முக்கிய நிர்வாகிகள் போராட்ட களத்தில் எதிர்பார்ப்பின்றி பங்காற்றியவர்கள். தடா, பொடா எனும் அடக்குமுறை சட்டங்களை எதிர்கொண்டவர்கள். மாவட்டம், பகுதி சார்ந்து மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள்.

இவை எவற்றிற்காகவும் பிரதிபலனை மக்களிடத்தில் கோரியதில்லை இவர்கள். சாமானியர்களுக்காகவும், சமூக செயற்பாட்டாளர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து அவர்களுக்கு துணையாக நின்றார்கள். இன்றும் இம்மரபை தொடர்கிறார்கள். இந்த அரசியல் திராவிடர் இயக்க, பெரியாரிய அரசியலோடு நெருக்கமானது. இப்படி தனித்துவமான அரசியலை கொண்டதாக மதிமுகவையும், அதன் தொண்டர்களையும் வார்த்தார் ஐயா.வைகோ.
இவ்வகை அரசியலை கையில் எடுக்காமல் போனால் மக்களிடம் வெற்றி பெற இயலாது எனும் நிலையிலேயே ஆண்ட, ஆளும் திராவிட கட்சிகள் இந்த அரசியல் பக்கம் நகர ஆரம்பித்துள்ளன. அவ்வகையில் பெரிய திராவிட கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்தது மதிமுக. வெற்றி, தோல்வி, பணபலம், அரசியல் அதிகாரம் என்பதைக் கடந்து எளிய மக்களுக்காக குரல் எழுப்ப தமிழகத்தின் அரசியல் தேவை 'மதிமுக'." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த பதிவை பேஸ்புக்கில் பகிர்ந்து நன்றி தெரிவித்து உள்ளார் துரை வைகோ. அதில், "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் உன்னதமான தொண்டர்களின் சார்பாக சகோதரர் திருமுருகன் காந்தி அவர்களின் பதிவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக












Click it and Unblock the Notifications