மோதல் ஓவர் ஓவர்! சமாதானம் செய்த வைகோ! கட்டுப்பட்ட மல்லை சத்யா! ராஜினாமாவை வாபஸ் பெற்ற துரை வைகோ
சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார். மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமாதான பேச்சு நடத்திய நிலையில் துரை வைகோ ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார்.
இதனால் மதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராகவே கட்சி பதவியை துறந்ததாக மறைமுகமாக துரை வைகோ கூறியிருந்தார்.

இந்த நிலையில் பொதுச் செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான் என மல்லை சத்யா அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக எம்பி துரை வைகோ கூறியிருப்பதாவது: வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை. அவர் மட்டுமே வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.
மதிமுக முதன்மை செயலாளர்
மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து நான் விலகியதில் மாற்றம் இல்லை. மதிமுகவுக்காகவும் வைகோவுக்காகவும் உழைத்த தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏராளமானோர் இருக்கிறார்கள் என துரை வைகோ கூறியிருந்தார். மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். நேற்றைய தினம் வைகோவை துரை வைகோவும் இன்று காலை வைகோவை மல்லை சத்யாவும் சந்தித்திருந்தனர். அப்போதே சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது தெரியவந்தது.
9 தீர்மானங்கள்
இந்த நிலையில் மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மான அறிக்கையில் முதன்மை செயலாளர் துரை வைகோ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்க கட்சி தலைமை மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மல்லை சத்யா
இந்த நிலையில் மல்லை சத்யா கூட்டத்தில் பேசுகையில் நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியை விட்டு விலக்கி விடுங்கள். துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். கடைசி வரை வைகோ தொண்டனாக இருந்து விட்டுப் போகிறேன். துரை வைகோ அரசியல் வரவேண்டும் என்று முதன் முதலில் கூறியது நான்தான்.
கட்சி விரோத நடவடிக்கைகள்
கட்சி விரோத நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. அப்படி ஏதாவது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை நிரூபித்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசுவது தான் இங்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
துரை வைகோ
இந்த நிலையில் துரை வைகோ பேசுகையில் கட்சி நலனுக்காகத்தான் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் வற்புறுத்தல் காரணமாக தான் நான் கட்சி பணிகளில் செயல்பட தொடங்கினேன். மதிமுக தொண்டர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் செயல்பட்டு வருகிறேன் என பேசினார்.
மல்லை சத்யா- துரை வைகோ சமாதானம்
இந்த நிலையில் துரை வைகோவையும் மல்லை சத்யாவையும் வைகோ சமாதானப்படுத்திவிட்டதாக தெரிகிறது. மேலும் இருவரும் கட்சி பணிகளை தொடருமாறும் வைகோ அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications