எதிர்க்கட்சி தலைவரும் வேறு கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில், விடுதியில் இருக்க கூடாதா?- துரைமுருகன்
சென்னை: எதிர்க்கட்சித் தலைவரும் வேறு கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில் விடுதியில் இருக்க கூடாதா என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலினும் தினகரனும் மதுரையில் ஒரே விடுதியில் தங்கி ரகசிய கூட்டணிக்கான பேரம் பேசி வருவதாக நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதை அமமுக கட்சியின் சார்பில் தங்கதமிழ்ச் செல்வன் மறுத்திருந்தார்.
மேலும் வழக்கமாக ஸ்டாலின் தங்கும் விடுதியில் அறை காலியாக இல்லாததால் அவர் தினகரன் தங்கியிருந்த ஹோட்டலில் தங்கியதாக தகவல்கள் வெளியாகின.
[செல்லூர் ராஜூவுக்கே தெரியாமல் மதுரைக்குள் ஊடுருவிய டெங்கு, பன்றிக் காயச்சல்!]

அனைத்து கட்சி
அதுபோல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதி மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதை விரைந்து நடத்திட அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இடைத்தேர்தல்
சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் துரைமுருகன். அவர் கூறுகையில், 18 தொகுதிகளுக்கு முதலில் இடைத் தேர்தல் நடக்கட்டும்.

டெங்கு
இடைத் தேர்தல் அறிவித்த பிறகுதான் எந்த முடிவையும் எடுப்போம். எல்லாக் காய்ச்சலும் தமிழ்நாட்டில்தான் வருகிறது. வருஷா வருஷம் தவறாமல் வந்து விடுகிறது டெங்கு. பன்றி காய்ச்சல் மற்றும் டெங்குவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரகசியம்
எல்லாமே அதிமுக ஆட்சியில்தான் வருகிறது. மு.க.ஸ்டாலினும் தினகரனும் ரகிசயமாக சந்தித்தது கற்பனையே. எதிர்கட்சித் தலைவரும் வேறு கட்சி தலைவரும் ஒரே விமானத்தில் ஒரே விடுதியில் இருக்கக் கூடாதா என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications