பெருமாள் பக்தை.. துர்கா ஸ்டாலின் பூஜையறையில் தினமும் ஒலிக்கும் மந்திரங்கள்.. அயோத்தி செல்வாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பெருமாள் பக்தை. திருப்பதி பெருமாளையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்து விட்டு வருவார். அவரது வீட்டு பூஜை அறையில் சமஸ்கிருத மந்திரங்களையும் ராம நாமத்தையும் அட்சரம் பிரகாமல் கூறுவார் துர்கா ஸ்டாலின். பெருமாள் பக்தையான அவரை தேடி வந்துள்ளது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்.

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டு பூஜை அறையில் தினம் தோறும் மந்திரங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். இவர்களுடைய வீட்டு குல தெய்வம் அங்காள அம்மன். தினமும் குல தெய்வ வழிபாட்டையும் பூஜை அறையில் தவறாமல் மேற்கொள்வது துர்கா ஸ்டாலின் வழக்கம்.

Durga Stalin Pooja room: Rama Mantram Slogans chant Durga Stalin

அனுமன், சிவன், சாய்பாபா, அன்னபூரணி, ராமர் லட்சுமணர் சிலை என்று இவர்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெரும்பாலான சிலைகள், இவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது தான். தினம் தோறும் பூஜை அறையில் அமர்ந்து பெரிய பெரிய மந்திரங்களை உச்சரிப்பதற்க்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் தினம்தோறும் அவர்கள் இறைவழிபாடு செய்யும் போது குறிப்பிட்ட சில தெய்வங்களுக்கு மட்டும், அந்தந்த கிழமைகளில் அந்தந்த தெய்வங்களுக்குரிய சில மந்திரங்களை உச்சரித்து இறை வழிபாடு செய்வதை தன்னுடைய வழக்கமாக கொண்டுள்ளார்.

தினந்தோறும் பெரிய அளவில் மந்திரங்கள் சொல்லி வழிபட முடியாவிட்டாலும் எளிமையான மந்திரங்களை மட்டுமே சொல்வாராம் துர்கா ஸ்டாலின். இது பற்றி துர்கா ஸ்டாலின் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சாய்பாபா: ஓம் நமோ பகவதே சாயிநாதாய அமிர்தவாக்கிய வர்சாய் சகல லோக பூஜிதாய சர்ப்வதோச நிவாரணநாய ஷீர்டிவாசாய சாயி நாதாயதே நமஹ ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ சத்குரு சாயி நமோ நமஹ ஓம் சாய் நாதாய வித்மஹே ஷிர்டிவாசாய தீமஹி தந்நோ சாயி ப்ரசோதயாத்.

ஹனுமன்: அசாத்ய சாதக ஸ்வாமிந் அசாத்யம் தவகிம்வத ராம தூத க்ருபாசிந்தோ மத் கார்யம் சாதய ப்ரபோ

ராமர்: ஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே

சிவன்: ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் இப்படியாக சாய்பாபா ஹனுமன் பெருமாள் சிவன் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் உண்டான மந்திரத்தை பூஜை அறையில் தினம்தோறும் தன்னுடைய வாயால் உச்சரித்து, தீபமேற்றி வழிபாடு செய்வது துர்கா ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யூடுயூப் சேனலில் கூறியுள்ளார்.

பெருமாள் பக்தையான துர்கா ஸ்டாலின் வீடு தேடி வந்துள்ளது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.கூடவே ராமருக்கு பூஜை செய்த அக்‌ஷதையும் அளித்துள்ளனர். இதனை மகிழ்ச்சியுடன் துர்கா ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். விரைவில் தரிசனம் செய்ய வருவதாக பதிலளித்துள்ளார் துர்கா ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+