வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்.. மின்சார வாகன இ-சார்ஜிங் பாயிண்ட்.. தமிழக அரசு வழிகாட்டி நிறுவனம் செம
சென்னை: தமிழகத்தில் இ-சார்ஜிங் பாயிண்ட் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இது பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் அளித்து வருகிறது.
இ-மின்சார வாகனங்களின் எண்ணிக்கை என்பது சமீப காலமாகவே அதிகரித்து உள்ளது.. இதற்கான தேவைகளும் பொதுமக்களிடம் பெருகியபடியே உள்ளது.. நம்முடைய நாட்டை பொறுத்தவரை, மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு நிறுவனங்கள் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வமும் காட்டி வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் வரை 10.44 லட்சம் மின்சார வாகனங்கள் இந்தியாவில் விற்பனை ஆகி உள்ளன. இதில், தமிழகத்தில் 4.14 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன.
சார்ஜிங் பாயிண்ட்: எனவே, தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாட்டில், ஹைவேஸ்களில், 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது.. அதாவது, வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
சார்ஜிங் மையம்: அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக தமிழ்நாடு மின்வாரியம் தேசியநெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க திட்டமிட்டது. அதன்படியே, தேசிய நெடுஞ்சாலைகளில் தலா 25 கிமீ தூரத்துக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் இடங்களை தேர்வு செய்யும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டதுடன், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க 100 இடங்களை கண்டறிந்து, அதற்கான டெண்டர் விடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
சார்ஜிங் சென்டர்: சென்னையை பொறுத்தவரை, மெட்ரோ ரயில் நிலையம், சில வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்க்குள் போன்றவற்றில் பொது சார்ஜிங் மையங்கள் உள்ளன... இதுபோலவே, மற்ற மாவட்டங்களிலும், ஒரு சில இடங்களில் சார்ஜிங் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.. ஆனால், அவையெல்லாம் எங்கிருக்கின்றன என்ற சரியான விபரம், நிறைய பேருக்கு தெரிவதில்லை.
அதனால்தான், சார்ஜிங் மையம் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், இதற்காகவே பிரத்யேகமாக தனி வெப்சைட் ஒன்றை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அநேகமாக, இந்த வருட இறுதிக்குள், தனி இணையதளம் மற்றும் மொபைல் செயலி இரண்டையுமே செயல்பாட்டிற்கு கொண்டு வர போகிறதாம்.
சபாஷ் முடிவு: அதில், சார்ஜிங் மையங்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன? எவ்வளவு கி.மீ. தூரத்தில் உள்ளன? என்பது உள்ளிட்ட விபரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்றும், இந்த அதிரடிகள் பொதுமக்களுக்கு மிகுந்த வசதியை பெற்றுத்தரும் என்றும் நம்பப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications