அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம்
சென்னை: ஐடி நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது தற்போது இயல்பானதாக மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை, ஆரக்கிள் நிறுவனத்திலிருந்து மொத்தம் 30,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 12,000 பேர்.
அதிகாலை 5-6 மணிக்கு மொத்த ஊழியர்களுக்கும் மெயில் வந்திருக்கிறது. இந்த மெயிலில், ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மெயில் வந்த அடுத்த நொடியிலிருந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் லாக்-இன் செயல்பாடு முடக்கப்பட்டிருக்கிறது.

ஆரக்கிள் நிறுவனத்தின் அராஜகம்
ஐடி நிறுவனங்கள் என்றாலே பணி நீக்கம் என்பது எழுதப்படாத விதியாக மாறியிருக்கிறது. இதனை தற்போது இருக்கும் நிறுவனங்கள் நார்மலைஸ் செய்து வருகின்றன. இதை எதிர்த்து எந்த அரசியல் தலைவர்களும் நாடாளுமன்றத்தில் பெரியதாக பேசுவதாக தெரியவில்லை. எனவே பணி நீக்கங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆரக்கிள் நிறுவனம் அராஜகம் செய்து வருகிறது.
இந்திய ஊழியர்கள்
இன்று அதிகாலை, அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 18% அதாவது, 30,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 12,000. இந்த பணி நீக்கத்திற்கு காரணம், அந்நிறுவனம் ஏஐ-ல் அதிக முதலீடு செய்திருப்பதுதான். பழைய தொழில்நுட்பங்களை முற்றிலுமாக நீக்கி, ஏஐ சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு இந்நிறுவனம் பழகி வருகிறது. எனவே பழைய தொழில்நுட்பத்தில் வேலை பார்த்தவர்கள் கொத்தாக தூக்கப்பட்டிருக்கிறார்கள்.
இழப்பீடு அறிவிப்பு
வேலையை விட்டு தூக்கப்பட்டவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் கூடிய இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 15 நாட்கள் சம்பளம் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு ஊழியர் இந்த நிறுவனத்தில் 10 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார் எனில்,
10*15=150 - அதாவது 5 மாத சம்பளம்
மனிதாபிமானம் இல்லாத செயல்
இந்த தொகை இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மாத காலம் நோட்டீஸ் அவகாசம், பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதியம், கூடுதலாக இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தானாகவே முன் வந்து ராஜினாமா செய்பவர்களுக்குதான் இந்த சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் சோகம் என்னவெனில், கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றிய மூத்த ஊழியர்கள் கூட எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதுதான். இந்த பணி நீக்கம் இந்திய ஐடி துறையில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications