இன்று ஈஸ்டர்.. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்.. இயேசு உயிர்தெழுதலை காட்சிப்படுத்திய சர்ச்சுகள்
சென்னை: சிலுவையில் உயிர்துறந்த இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்ததை நினைவுக்கூறி ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னை சாந்தோம், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயங்கள் உள்பட அனைத்து சர்ச்சுகளிலும் காலையிலேயே சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடந்தன.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது ஈஸ்டர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார் என்று பைபிள் கூறுகிறது.

இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை தான் கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடந்தன. சென்னை சந்தோம், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயம் உள்பட அனைத்து சர்ச்சுகளிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இரவில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி தத்ரூபமாக மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த வேளையில் கிறிஸ்தவர்கள் பட்டாசு வெடித்து இயேசு உயிர்த்தெழுவதை வரவேற்றனர். அதன்பிறகு பூஜிக்கப்பட்ட புனிதநீர் கிறிஸ்தவர்கள் மீது தெளித்து அருளாசி வழங்கப்பட்டது. ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் சென்னை, நாகை வேளாங்கண்ணி தேவாலயங்களில் உள்ளூர் மக்களோடு வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.
முன்னதாக கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைப்பிடித்து வந்தனர். கடந்த பிப்ரவரி 22ம் தேதி இந்த தவக்காலம் தொடங்கியது. கடந்த வார ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பிறகு பெரிய வியாழன் அனுசரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது.
மேலும் ஈஸ்டர் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ஈஸ்டர் வாழ்த்துக்கள்! இந்த சிறப்பான நாள் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும். சமுதாயத்திற்கு சேவை செய்யவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும் மக்களை ஊக்குவிக்கட்டும். இந்த நாளில் கர்த்தராகிய கிறிஸ்துவின் எண்ணங்களை நாம் நினைவுகூருவோம்'' என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி சார்பில், ‛‛ ஈஸ்டர் திருநாளில், எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இணக்கமான உலகை உருவாக்குவதில் இயேசு கிறிஸ்துவின் கருணை, இரக்கம், உள்ளடக்கம், மன்னித்தருளும் செய்தியை நம்முள் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வலியுறுத்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‛‛தேவ குமாரனாம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, ‛‛இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்தவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‛‛மனித குலத்தின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதோடு, அழுத்தும் துன்ப இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை ஒளி ஏற்றும் உன்னத திருநாள் தான், உலகெங்கும் கிறிஸ்தவ மக்கள் போற்றி கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளாகும். தமிழகத்தில் தரணியெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை மதிமுக சார்பில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன், ‛‛கிறித்தவப் பெருங்குடியினர் யாவருக்கும் 'உயிர்த்தெழுதல் நாள்' வாழ்த்துகள்'' என கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், ‛‛உலகில் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்துவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார். இன்னும் பல அரசியல் கட்சி தலைவர்கள் ஈஸ்டர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications