ஈஸ்டர் பண்டிகை.. தமிழ்நாடு முழுக்க கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை.. வேளாங்கண்ணியில் அலைமோதும் கூட்டம்
சென்னை: சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கருதப்படும் ஈஸ்டர் தினம் இன்று நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது.
புனித வெள்ளி தினம் இயேசு கிறிஸ்து மரிக்கும் நாளாகவும், ஈஸ்டர் தினம் அவர் உயிர்த்தெழும் நாளாகவும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவர்களுக்கு இது மிகவும் முக்கியமான நாளாகும்.
இந்த நிலையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுக்க கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நாடு முழுக்க உள்ள தேவாலயங்களில் இரவு நேர வழிபாட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னை
சென்னையில் பல்வேறு தேவாலயங்கள் உள்ளன. பெசண்ட் நகர், சின்னமலை, சாந்தோம், தி நகர் ஆகிய பகுதிகளில் இருக்கும் தேவாலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இங்கு பலர் வந்து நேற்று இரவும், இன்று அதிகாலையும் வழிபாடு நடத்தினர். பொதுவாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் தினத்தின் போது பலர் வழிபாடு நடத்துவது வழக்கம்.

வேளாங்கண்ணி
அதேபோல் நள்ளிரவிலும், அதிகாலையிலும் பலர் இங்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பொதுவாக இந்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். முக்கியமாக கேரளாவில் இருந்து பலர் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

சிறப்பு வழிபாடு
அதேபோல் நேற்றும், இன்று அதிகாலையும் பலர் இங்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இங்கு ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. மக்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தியபடி வழிபாடு நடத்தினர். ஒவ்வொரு தேவாலயத்தில் பேராலயஅதிபர் மூலம் திருப்பலி நடத்தப்பட்டது. மக்கள் பலர் தேவாலயங்களில் கூடியதால் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.

ஈஸ்டர்
2019ல் ஈஸ்டர் நாளின் போது இலங்கையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முக்கியமாக தேவாலயங்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. இதில் 560 பேர் வரை பலியானார்கள். இந்த நிலையில் இன்று ஈஸ்டரை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications