தி.நகர் டிராபிக்.. இனி ஒரு நொடி கூட நிற்க வேண்டாம்.! 5 நிமிடங்களில் சல்லுனு பறக்கலாம்! தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தியாகராய நகரில் டிராபிக் முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், இதைத் தீர்க்க சென்னை மாநகராட்சி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் டிராபிக் என்பது மிக பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. பீக் ஹவரிஸில் வெளியே போனால் டிராபிக்கில் சிக்காமல் எங்கும் செல்ல முடியாது என்ற சூழலே நிலவி வருகிறது. இதை மாற்ற இப்போது பல்வேறு நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

 Easy to escape T Nagar traffic within 5 minutes Chennai corporation super steps

குறிப்பாக சென்னையில் தியாகராய நகரில் டிராபிக் மிக மோசமாக இருக்கிறது. அதன்படி சென்னையில் டிராபிக்கை குறைக்க சில முக்கிய இடங்களில் பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன.

பாலங்கள்: அதன்படி நகரின் மிக நீளமான பாலத்திற்கான கட்டுமானம் 2024இல் தியாகராய நகரில் தொடங்க உள்ளது. மொத்தம் 4 கிமீ நீளம் கொண்டதாக அமையும் இந்த பாலம் எஃகு மற்றும் கான்கிரீட்டை கொண்ட ஒரு ஹைப்ரிட் மேம்பாலமாக அமைய உள்ளது. இது அண்ணா சாலையை நேரடியாக சிஐடி நகர் வழியாக மகாலிங்கபுரத்துடன் இணைக்கும்.

இதன் மூலம் உஸ்மான் சாலையின் நெரிசலான இடங்களைக் கடக்கும் நேரம் 30 நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே மற்றொரு 3.2 கிமீ நீள மேம்பாலம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி: இப்போது சென்னை மாநகராட்சி ரூ.130 கோடியில் சிஐடி நகரில் 1.2 கிமீ நீளமுள்ள மேம்பாலத்தைக் கட்டி வருகிறது. இந்த மேம்பாலம் உஸ்மான் சாலையுடன் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மேம்பாலம் ரெடியானதும், இது மகாலிங்கபுரம் மேம்பாலத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் ஆற்காடு சாலையில் இருந்து மக்கள் ஈஸியாக மகாலிங்கபுரம் வரை செல்லலாம்.

இதில் கோடம்பாக்கம் மற்றும் சிஐடி நகர் இணைக்கப்பட்ட பிறகு, இந்த மேம்பாலம் 4 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இதில் குறைந்தது 4 இடங்களில் வாகன ஓட்டிகளால் மேம்பாலத்திற்குள் வரவும் வெளியேறவும் முடியும். இதற்கான கட்டுமானப் பணிகள் 2024 இல் தொடங்கி 2025இல் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "சிஐடி நகர்-உஸ்மான் சாலை மேம்பாலம் அடுத்த ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டால், தி.நகர் பேருந்து நிலைய சந்திப்பில் நெரிசல் குறையும்.. அதன் பிறகு கோடம்பாக்கம்- பசுல்லா சாலை சந்திப்பில் மட்டுமே டிராபிக் அதிகமாக இருக்கும். இந்த புதிய மேம்பாலத்தில் விவேக் சந்திப்பில் வாகனங்கள் இடதுபுறம் திரும்புவதற்கு ஏற்ப வழி அமைக்கப்படும். அதேபோல ஆற்காடு சாலையை நோக்கிச் செல்ல சர்வீஸ் லேனில் மற்றொரு வெளியேறும் வழியும் அமைக்கப்படும்" என்றனர்.

5 நிமிடம்: தற்போது இருக்கும் டிராபிக்கை வைத்துப் பார்க்கும் போது, இந்த குறிப்பிட்ட பகுதியில் பீக் ஹவரில் ஒரு மணி நேரத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த பிரிட்ஜ் வந்தால் அண்ணா சாலையில் இருந்து மகாலிங்கபுரம் வரையிலான பயண நேரம் கணிசமாகக் குறையும். இப்போது இடைப்பட்ட தூரத்தைக் கடக்க 30 நிமிடங்கள் வரை ஆகும் நிலையில், இந்த மேம்பாலப் பணிகள் அனைத்தும் முடிந்தால் வெறும் 5 நிமிடங்களில் நாம் தியாகராய நகர் டிராபிக்கை கடக்க முடியும்.

மேலும், இப்போது இந்த சாலையில் அதிகபட்சம் 8 முதல் 10 கிமீ வேகத்தில் தான் வாகனங்களால் செல்ல முடிகிறது. இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தால் சராசரி வேகமும் 30 கிமீ ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+