சென்னையில் ஒரே நேரத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. சிக்கிய முக்கியமான டிஜிட்டல் ஆவணங்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போக்குவரத்துத் துறை ஓய்வுபெற்ற துணை ஆணையர் தரணிதரன் வீடு மற்றும் தரணிதரனின் மனைவியின் ஆடிட்டர் அலுவலகம், திருவொற்றியூரில் உள்ள ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் முருகேசன் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தேனாம்​பேட்​டை, எல்​லை​யம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் தரணிதரன். இவர் போக்​கு​வரத்​துத் துறை​யில் துணை ஆணை​ய​ராகப் பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். இவர் தனது பணிக்​காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாகச் சொத்து சேர்த்​த​தாகக் கூறப்​படு​கிறது. இது தொடர்​பாக ஏற்​கெனவே விசா​ரணை நடை​பெற்று வந்த நிலை​யில், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் அமலாக்​கத் துறை​யும் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கியது.

ED raid Enforcement directorate

இதன் தொடர்ச்​சி​யாக, நேற்று காலை முதல் தரணிதரன் வீட்​டில் அமலாக்கத்துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர். மேலும், அவரது மனைவியின் ஆடிட்டர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதே​போல், சென்னை திரு​வொற்​றியூரைச் சேர்ந்த தொழில​திபர் முரு​கேசன் என்​பவரது வீட்​டிலும் அமலாக்​கத் ​துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டிரான்ஸ்​போர்ட் தொழில் செய்​து ​வரும் இவருக்​கும், இந்த சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​குக்​கும் தொடர்பு இருக்​கலாம் என்ற சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் இந்​தச் சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது.

தொழிலதிபரான முழுகேசன், வசந்தம் என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இதுதவிர அவரது மகன்கள் ராஜேஷ் மற்றும் அருண் ஆகியோர் ஷிப்பிங் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தொடர்புடைய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

ஹைதரா​பாத்​தைச் சேர்ந்த அமலாக்​கத்துறை அதி​காரி​கள் இந்​தச் சோதனை​யில் நேரடி​யாகப் பங்​கேற்​றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் நடந்து வந்த இந்தச் சோதனையில், வழக்கு தொடர்பாக ஆவணங்கள், வங்கி பாஸ் புத்தகங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்​போது அந்த ஆவணங்​களை ஆய்வு செய்​யும் பணி நடைபெறுகிறது என்றும், இந்த ஆய்வு முடிந்த பிறகு கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளி​யிடப்​படும் என்றும் அமலாக்கத்துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+