பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. யார் இந்த அருணா? பின்னணி
சென்னை: தமிழ் சினிமாவில் 1980 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அருணா வீட்டில் இன்று திடீரென்று அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கி உள்ளனர். சென்னை ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 80ஸ் காலக்கட்டத்தில் நடிகையாக வலம் வந்தவர் அருணா. இவரை தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாரதிராஜா. தமிழில் ‛கல்லுக்குள் ஈரம்' என்ற திரைப்படத்தின் மூலம் அருணா என்ட்ரி கொடுத்தார்.

அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் அருணா நடித்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடிகர் விஜயகாந்தின் சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, பாக்கியராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங், கார்த்திக்குடன் கேள்வியுடன் நானே பதிலும் நானே, நடிகர் சிவாஜி நடித்த முதல் மரியாதை உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பெரும்பாலான படங்களில் 2ம் கதாநாயகி, துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றார். அருணாவின் கணவர் பெயர் மோகன் குப்தா. இவர் வீட்டின் உள்கட்டமைப்புகளில் அலங்கார பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடிகை அருணாவின் வீட்டில் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவை சேர்ந்த அருணா சென்னையில் செட்டில் ஆகி உள்ளார். அருணா சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரைவ் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலை 7 மணிக்கு அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறையின் 4 அதிகாரிகள் சென்று சோதனையை தொடங்கி உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications