அதிர்ந்த அதிமுக.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 11 மணி நேரம் நடந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை வியாழக்கிழமை இரவு முடிவுக்கு வந்தது.
அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். அதிமுகவில் மிக முக்கிய நபராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் வியாழக்கிழமை காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. 3 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 8க்கும் மேற்பட்டோர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.
விஜயபாஸ்கர் வீட்டில் ஈடி சோதனை: விஜயபாஸ்கர் வீட்டில் இதற்கு முன்பாக வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறையும் சோதனை நடத்தியிருந்தது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.
எதற்காக சோதனை?: இந்த நிலையில்தான், தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் சூழலில் விஜபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தற்போது சோதனை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விராலிமலை எம்.எல்.ஏ ஆவாக இருக்கும் சி விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர் கே நகர் தேர்தல் பண பட்டுவாடா புகார் தொடர்பாகவும், குட்கா முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர்.
ஐடி சோதனையின் தொடர்ச்சியா?: சோதனையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், தற்போது விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை, மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகப்படியான கற்கள் வெட்டி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது குவாரியிலும் ஏற்கனவே ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். எனவே, அந்த சோதனையின் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையினர் தற்போது கல்குவாரியிலும் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அமலாகக்த்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான பிறகே சோதனைக்கான முழு விவரம் தெரியவரும்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications