கரூர் சொகுசு பங்களா.. மருமகனும் மகளும் ஆஜராகவில்லை! செந்தில் பாலாஜியின் தம்பி மாமியாருக்கு ED சம்மன்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியின் மாமியாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்ததன் பேரில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜி கடந்த 7ஆம் தேதி இரவு புழல் சிறையில் சில வழிமுறைகளை செய்த பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அன்று இரவு அவரிடம் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து அவரிடம் அடுத்த நாள் காலை முதல் கேள்விகள் கேட்கப்பட்டன. செந்தில் பாலாஜியிடம் தினமும் 50 கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. கரூரில் அவருடைய தம்பி கட்டி வரும் சொகுசு பங்களா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி, அவர் வீடு கட்டுவது குறித்து எனக்கு சொன்னதாக நினைவில் இல்லை என்றார்.
இந்த நிலையில் கரூர் - சேலம் சாலையில் கட்டப்பட்டு வரும் அந்த பிரம்மாண்ட வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நிலம் மோசடியாக பெறப்பட்டது என்றும் கட்டுமான பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து கட்டப்படும் வீட்டின் ஆவணங்கள் குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டிற்கு சென்றனர்.

அங்கு தம்பி மனைவி நிர்மலா வீட்டில் இல்லாததால் கரூர் பங்களாவின் ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸை வீட்டில் ஒட்டிவைத்துவிட்டு வந்தனர். இந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. மேலும் ரூ 30 கோடி மதிப்புள்ள 2.49 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ 10 லட்சத்திற்கு வாங்கியதாக வந்த தகவலை அடுத்து அமலாக்கத் துறை அந்த பங்களாவை முடக்கியது.
முடக்கப்பட்ட நிலம், அசோக்குமாரின் மாமியார் லட்சுமியிடம் இருந்து தான் நிர்மலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மாமியார் லட்சுமியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications