பாஜகவை சேர்ந்த அந்த 18 பேர்.. ஒருத்தர கூட ED கைது செய்யலயே ஏன்? லிஸ்ட் போட்டு மனோ தங்கராஜ் அட்டாக்
சென்னை: எதிர்க்கட்சிகளை தேடித்தேடி கைது செய்யும் அமலாக்கத்துறை ஊழலின் ஊற்றுக்கண்ணான பாஜகவை சார்ந்த ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன்? என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பயன்படுத்தி தனது அரசியல் எதிரிகளை வேட்டையாடுகிறது என்பது எதிர்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனமாக உள்ளது.

தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. பாஜக தன்னை பிரசாரம் செய்ய விடாமல் முடக்க பார்ப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை கைது செய்தற்கு பின்னணியில் பாஜவே உள்ளது என இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் தான், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜகவில் ஊழல் முறைகேடு புகார்கள் உள்ள யார் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகளை மட்டுமே தேடித்தேடி கைது செய்கிறது என்றும் சாடியுள்ளார். இது தொடர்பாக மனோ தங்கராஜ் கூறியிருப்பதாவது:- எதிர்க்கட்சிகளை தேடித்தேடி கைது செய்யும் அமலாக்கத்துறை (ED), ஊழலின் ஊற்றுக்கண்ணான பாஜகவை சார்ந்த ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன்?
1. 2019-ல் எடியூரப்பாவிடம் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் அருண் ஜெட்லீ, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக மத்திய அலுவலக கணக்கு என பலருடன் 1800 கோடி ரூபாய் மதிப்பிலான பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்ததே, எடியூரப்பாவை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
2. குஜராத்தில் மோடி ஆட்சியில் 750 கோடி ஊழலில் ஈடுபட்ட அமைச்சர் விபுல் சௌத்ரி-யை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
3. பல கோடி டெண்டர் ஊழல் வழக்கில் ஈடுபட்ட கர்நாடக பாஜக அமைச்சர் நேரு ஓலேகரை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
4. 40 பேர் பலி மற்றும் பல கோடி ஊழல் நடைபெற்ற மத்திய பிரதேச வியாபம் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக அமைச்சர் லக்ஷ்மிகாந்த் ஷர்மா-வை 2019-ல் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. பின்பு கொரோனாவால் மரணமடைந்தார். முறைகேடு நடந்ததை நாடே அறியும். இந்த பணபரிமாற்றத்தை ED விசாரிக்காதது ஏன்?
5. எடியூரப்பா கொரோனா நேரத்தில் 40 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ. பாசனகவுடா பட்டில் எத்னல் குற்றஞ்சாட்டினாரே, அதை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
6. 2001-ல் பாதுகாப்பு துறை தளவாடங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடைய பாஜக தலைவர் பங்காரு லட்சுமணனை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
7. பெங்களூர் மெகாசிட்டி ஊழலில் ஈடுபட்ட கர்நாடக பாஜக அமைச்சர் யோகேஷ்வர்-ஐ ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
8. மோடி அமைச்சரவையில், குஜராத்தில் 400 கோடி மீன்வள ஒப்பந்த ஊழல் வழக்கில் ஈடுபட்ட அமைச்சர்கள் பர்ஷோத்தம் சோலங்கி & திலீப் சங்கனி-வை ED ரெய்டு செய்து அவர்களை கைது செய்யாதது ஏன்?
9. 103 கோடி வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மகாராஷ்டிரா பாஜக தலைவர் மோகித் கம்போஜ்-ஐ ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
10. 18 கோடி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட கர்நாடக பாஜக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி-ஐ ED ரெய்டு செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
11. 2438 கோடி ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் ஹரீஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ்-ஐ ED ரெய்டு செய்து கைது செய்யாதது ஏன்?
12. 5000 கோடி நியோமேக்ஸ் நிதி மோசடியில் ஈடுபட்ட மதுரை பாஜக பிரமுகர் வீரசக்தி-ஐ ED ரெய்டு செய்து கைது செய்யாதது ஏன்?
13. விக்ராந்த் போர்கப்பல் பெயரில் 57 கோடி பண மோசடியில் ஈடுபட்ட மகாராஷ்டிரா பாஜக தலைவர் கிரித் சோமயா-வை ED ரெய்டு செய்து கைது செய்யாதது ஏன்?
14. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த திலீப் ரேய் ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கில் பல கோடி மோசடியில் ஈடுபட்டாரே - EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
15. 1 கி.மீ. சாலை அமைக்க 250 கோடி; சுங்கச்சாவடி ஊழல் - 137 கோடி; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 22.44 கோடி ஊழல் - இதில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை EDRaid செய்து கைது செய்யாதது ஏன்?
16. மத்திய உள்துறை அமைச்சகம் ஊழலில் முதலிடம் பிடித்துள்ளதே. இதில் மத்திய அமைச்சருக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை EDRaid செய்து விசாரிக்காதது ஏன்?
17. ரூ. 526 கோடிக்கு வாங்க இருந்த ரபேல் விமானத்தை மோடி அரசு ரூ. 1,670 கோடிக்கு வாங்கியதே - இதில் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக அமைச்சர்களை EDRaid செய்து விசாரிக்காதது ஏன்?
18. 1.37 கோடி ஊழல் வழக்கில் ஈடுபட்ட மிசோரம் பாஜக எம்.எல்.ஏ. புத்ததான் சக்மா-வை EDRaid செய்து அவரை கைது செய்யாதது ஏன்?
-
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி












Click it and Unblock the Notifications