Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சான்ஸே இல்லை".. 100 நாளில் திமுக இப்படியா?.. எல்லாமே கானல்‌ நீரா?.. எடப்பாடி பழனிசாமி அட்டாக்

தமிழக பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் அறிக்கையில் அறிவித்த நகைக் கடன் தள்ளுபடி சலுகை பலருக்கு கிடைக்க கூடாது என்பதற்காக பல நிபந்தனைகளை விதிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் ஆளுநர் உரையின்போதே, நகைக்கடன் தள்ளுபடி எங்கே? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்..

அன்றைய தினம் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 சவரன் நகைக் கடன் ரத்து, விவசாயிகள் பயிர்க் கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகையை 1500 ரூபாய் ஆக உயர்த்தும் திட்டம் உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.

 தள்ளுபடி

தள்ளுபடி

இந்நிலையில், நேற்றைய தினம், நகைக்கடன் தள்ளுபடி இப்போதைக்கு இல்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்திருந்தார்.. அத்துடன், எதற்காக அந்த நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்பதற்கான நீண்ட நெடிய விளக்கத்தையும் அவர் தந்திருந்தார்.. அதிமுக ஆட்சியில் இந்த அறிவிப்பு தொடர்பான சில முறைகேடுகள் நடந்துள்ளதால், அதை பற்றியெல்லாம் விசாரித்து, ஆராய வேண்டி உள்ளது என்றும் தெளிவுபடுத்தி இருந்தார்.

 நிதியமைச்சர்

நிதியமைச்சர்

ஆனால், நிதியமைச்சர் இப்படி சொன்னது குறித்து எதுவுமே பதிலளிக்காமல், அதுகுறித்து எந்தவித கருத்தையும் வெளிப்படுத்தாமல், மறுபடியும் திமுகவை குற்றஞ்சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அந்த அறிக்கை இதுதான்.

 ஏமாற்றம்

ஏமாற்றம்

தற்போதைய திமுக அரசின்‌ செயல்பாடுகளைப்‌ பார்க்கும்‌ போது, "ஏச்சு பிழைக்கும்‌ தொழிலே சரிதானா? எண்ணிப்‌ பாருங்க... ஐயா எண்ணிப்‌ பாருங்க" என்று புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌ பாடிய பாடல்‌ தான்‌ நினைவுக்கு வருகின்றது. ஏமாறுவதற்கு ஆள்‌ இருக்கின்றவரை ஏமாற்றிக்‌ கொண்டிருக்கலாம்‌ என்ற கொள்கையின்‌ அடிப்படையில்‌, திமுக-வின்‌ விடியா அரசு செயல்படுகிறது. இந்தஆட்சியின்‌ 100 நாள்‌ செயல்பாடுகளிலேயே ஏமாற்றம்‌ அடைந்த மக்கள்‌ விழி பிதுங்கி நிற்கிறார்கள்‌.

 நகைக்கடன்

நகைக்கடன்

"நாங்கள்‌ ஆட்சிக்கு வந்தால்‌, 5 சவரன்‌ வரை நகைக்‌ கடன்‌ தள்ளுபடி செய்வோம்‌ என்று வாக்குறுதி அளித்தவர்கள்‌, இப்போது பசப்பு வார்த்தைகளைப்‌ பொழிகிறார்கள்‌. தமிழக மாணவர்கள்‌ வங்கிகளில்‌ வாங்கிய உயர்‌ கல்விக்கான கல்விக்‌ கடனை ரத்து செய்வோம்‌ என்று வாக்குறுதி அளித்து, வாக்குகளைப்‌ பெற்ற ஆட்சியாளர்கள்‌ அதை சுத்தமாக மறந்துவிட்டார்கள்‌."

 வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

தற்போது நடைபெற்று வரும்‌ திமுக அரசு, தேர்தல்‌ வாக்குறுதிகளை நிறைவேற்ற, பல்வேறு நிபந்தனைகளை விதிக்க இருப்பதாகச்‌ செய்திகள்‌ வருகின்றன. 5 சவரன்‌ நகைக்‌ கடன்‌ தள்ளுபடி சலுகை பலருக்கு கிடைக்கக்‌ கூடாது என்று என்னும்‌ அளவுக்கு நிபந்தனைகளை விதிக்க திமுக அரசின்‌ கூட்டுறவுத்‌ துறை முடிவு செய்துள்ளதாகத்‌ தகவல்கள்‌ வருகின்றன.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

கூட்டுறவு சங்கங்களில்‌ நகைக்‌ கடன்‌ பெற்ற அனைவரும்‌, கடன்‌ ரத்தாகும்‌ என்று மகிழ்ச்சி அடைந்த நிலையில்‌, 2018-ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ முதல்‌ 2020-ஆம்‌ ஆண்டுவரை பெறப்பட்ட நகைக்‌ கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம்‌. இதை செயல்படுத்துவதற்கான அரசாணை விரைவில்‌ வெளியிடப்படும்‌ என்று பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வந்துள்ளன. நகைக்‌ கடன்‌ தள்ளுபடி பெற, கடன்‌ பெற்றவர்‌ கூட்டுறவு சங்கங்களில்‌ பயிர்க்‌ கடன்‌ பெற்றிருக்கக்‌ கூடாது.

 குடும்பம்

குடும்பம்

மத்திய-மாநில அரசு ஊழியராக இருக்கக்‌ கூடாது... வருமான வரி செலுத்துபவராக இருக்கக்‌ கூடாது... ஆண்டு வருவாய்‌ ஒரு லட்சத்திற்குமேல்‌ இருக்கக்‌ கூடாது... கூட்டுறவு சங்கங்களில்‌ பணிபுரியக்‌ கூடாது... குடும்பத்தில்‌ ஒருவர்‌ மட்டுமே கடன்‌ பெற்றிருக்க வேண்டும்‌... என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள்‌ விதிக்கப்பட உள்ளதாகத்‌ தெரிகிறது.

சலுகை

சலுகை

இதனால்‌, நகைக்‌ கடன்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ என்று இந்த அரசு அறிவித்தாலும்‌, நிபந்தனைகளால்‌, பலரால்‌ கடன்‌ தள்ளுபடி சலுகை பெற முடியாது. "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" "சத்தியம் தவறாக உத்தமர் போலவே நடிக்கிறார்- "சமயம்‌ பார்த்து பல வழிகளில்‌ ..........!" என்று புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌ பாடியதைப்‌ போல, இந்த அரசை மக்கள்‌ குறை கூறத்‌ தொடங்கி உள்ளனர்‌.

 வாக்குறுதி

வாக்குறுதி

தமிழகத்தின்‌ கடன்‌ அளவு எவ்வளவு என்று தேர்தல்‌ சமயத்தில்‌, திமுக-வின்‌ தேர்தல்‌ அறிக்கையிலேயே தெளிவாகக்‌ கூறப்பட்டிருக்கிறது. இதையெல்லாம்‌ அறிந்துதான்‌, நிறைவேற்ற முடியாத 505-க்கும்‌ மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக தலைவர்‌ அள்ளி வீசியிருக்கிறார்‌. ஆனால்‌, அதனை நிறைவேற்ற எண்ணம்‌ இல்லாமல்‌, நிதி அமைச்சர்‌ அவர்களை வைத்து ஒரு வெள்ளை அறிக்கையைத்‌ தாக்கல்‌ செய்துள்ளனர்‌. அந்த வெள்ளை அறிக்கையும்‌, ஒவ்வொரு ஆண்டும்‌ அம்மா அரசில்‌ மாண்புமிகு நிதி அமைச்சர்‌ அவர்கள்‌ வெளியிட்ட நிதி அறிக்கையின்‌ தொகுப்பாகவே உள்ளது.

 புதிய நிபந்தனைகள்

புதிய நிபந்தனைகள்

மேலும்‌, இந்த நிதி அறிக்கையில்‌ தமிழ்‌ நாட்டின்‌ கடன்‌ இவ்வளவு உள்ளது என்று புதிதாக கண்டுபிடித்தது போலவும்‌, இதனால்‌ நலத்‌ திட்டங்களைத்‌ தொடர்ந்து செயல்படுத்த பல்வேறு நிபந்தனைகள்‌ விதிக்கப்படும்‌ என்றும்‌, அரசு ஊழியர்களுக்கு நாங்கள்‌ தான்‌ பாதுகாப்பு என்று கூறிக்கொள்ளும்‌ திமுக, அவர்களது பணப்‌ பயனில்‌ கை வைப்பதும்‌, தேர்தல்‌ அறிவிப்புகளில்‌ ஒன்றிரண்டை நிறைவேற்றுவதாகக்‌ கூறி, அதிலும்‌ புதிய புதிய நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின்‌ எண்ணிக்கையை பெருமளவு குறைக்கத்‌ திட்டமிட்டுள்ளதும்‌, உள்ளங்கை நெல்லிக்கனி போல்‌ தெளிவாகத்‌ தெரிகிறது.

 அடமானம்

அடமானம்

எனவே, திமுக-வின்‌ தேர்தல்‌ வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழ்‌ நாட்டு மக்களை இனியும்‌ ஏமாற்றாமல்‌, அவர்கள்‌ விழிப்படைந்து போராட்டக்‌ களத்தில்‌ குதிப்பதற்கு முன்பு, அதிர்ஷ்டவசத்தால்‌ ஆட்சிக்கு வந்த இந்த அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்‌. கூட்டுறவு சங்கங்களில்‌ விவசாயிகள்‌ பெற்றுள்ள பயிர்க்‌ கடன்களையும்‌, மற்றும் 5 பவுன்‌ வரை அடமானம்‌ வைத்து நகைக்‌ கடன்‌ பெற்றவர்களுடைய நகைக்‌ கடன்களையும்‌ உடனடியாகத்‌ தள்ளுபடி செய்ய வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+