"அவர்" இந்த கட்சிக்கு வர்றாராமே.. "சூழும்" மேகங்கள்.. எடப்பாடி பழனிசாமி திடீர் முடிவு.. அப்போ பாஜக?
சென்னை: மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி பலமுறை சொல்லிவிட்டாரே தவிர, அந்த மெகா கூட்டணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்பது இந்த நிமிடம் வரை தெரியவில்லை. அதேசமயம், சில "கணக்குகளையும்" எடப்பாடி போட்டு வருவதாக தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்பு, சசிகலா மற்றும் திவாகரன் குறித்து நாம் ஒரு பிரத்யேக செய்தி வெளியிட்டிருந்தோம்.. அதாவது, ஓபிஎஸ்ஸூம், டிடிவி தினகரனும் நீண்ட நாட்களுக்கு பிறகு, சந்தித்து பேசி, ஒருவருக்கொருவர் பழைய நட்பை புதுப்பித்து கொண்ட தருணத்தில்தான், மூத்த தலைவர் வைத்திலிங்கம் வீட்டு திருமணம் நிச்சயமானது.

இந்த கல்யாணத்தின்போதும், தினகரனும், ஓபிஎஸ்ஸூம் ஒருவரைவிட்டு ஒருவர் விலகாமல் நெருங்கியே காணப்பட்டனர்.. ஒன்றாகவே உட்கார்ந்து கல்யாண விருந்து சாப்பிட்டனர்.
வைத்திலிங்கம்: இந்த கல்யாணத்துக்கு, எப்படியும் சசிகலா வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா கல்யாணத்துக்கு வராதது குறித்து 2 விதமான தகவல்கள் வெளியாகின.. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அதாவது சதைப்பிடிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ளதால், திருமணத்தில் பங்கேற்கவில்லை என்று சொல்லப்பட்டது. மற்றொருபுறம், இதற்கு பின்னால், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் பங்கு இருப்பதாக கூறப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி: அதாவது, எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமான போக்கை திவாகரன் கொண்டிருக்கிறாராம்.. இதெல்லாம் தெரிந்தும்கூட, திவாகரனுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் வைத்திலிங்கம்.. அப்படியிருந்தும்கூட, தானும் கலந்து கொள்ளாமல், சசியையும் கலந்து கொள்ள வேண்டாம் என்று திவாகரன் தடுத்துவிட்டதாக சொன்னார்கள்.. அதற்கேற்றவாறு இன்றுவரை, சசிகலா, ஓபிஎஸ்ஸை சந்திக்காமலேயே தவிர்த்தும் வருகிறார். இதற்கு பின்னணியிலும் திவாகரன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், டிடிவி தினகரன் + சசிகலா இடையிலான விரிசலும் இன்னும் குறையவில்லை என தெரிகிறது. ஆக மொத்தத்தில், இப்போதுவரை, ஓபிஎஸ்ஸையும் சந்திக்காமல், தினகரனுக்கும் ஆதரவு தராமல் உள்ளார் சசிகலா. பேட்டிகளை தந்தாலும்கூட, அல்லது அறிக்கைகளை வெளியிட்டாலும்கூட, ஓபிஎஸ், தினகரன், எடப்பாடி என யார் பெயரையும் குறிப்பிட்டும், சாடியும்கூட பேசுவதில்லை.. மொத்த டார்கெட்டையும் திமுக மீதே செலுத்தி வருகிறார் சசிகலா.
எடப்பாடி பழனிசாமி: இவ்வளவு விஷயத்தையும், எடப்பாடி பழனிசாமியும் கவனிக்காமல் இல்லை.. அனைத்தையும் உற்று கவனித்து வருகிறார்.. எடப்பாடியை பொறுத்தவரை, தனக்கு பெரும் தலைவலியாக நினைப்பது, ஓபிஎஸ் மற்றும் தினகரனைதானே தவிர, சசிகலா மீது எந்த அதிருப்தியும் கிடையாது. சசிகலாவை வைத்து தினகரன் அதிமுகவுக்குள் வந்துவிடக்கூடும், ஓபிஎஸ்ஸை வைத்து, பாஜக "அதிகாரத்தை" செலுத்திவிடக்கூடும் என்பதே, மிகப்பெரிய கலக்கமாக எடப்பாடிக்கு இருந்து வருவதாக தெரிகிறது.
ஆனால், இப்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்குலத்தோர் வாக்குகளை எடப்பாடி பழனிசாமி பெற்றாக வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.. மற்றொருபுறம், பாஜகவின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.. எந்த காரணம் கொண்டும், ஓபிஎஸ் + தினகரனை சேர்த்து கொள்ளக்கூடாது என்பதில் தொடர்ந்து உறுதியுடன் எடப்பாடி இருந்து வரும்நிலையில், சசிகலாவை மட்டும் அதிமுகவில் இணைத்து கொள்ளலாமா? என்ற யோசனைக்கு வந்துள்ளாராம்.

முக்குலத்தோர்: இதனால், முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதுடன், பாஜகவின் நெருக்கடியில் இருந்தும் தப்பிக்கலாம் என ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க திட்டமிட்டு வருகிறாராம்.. இதற்கெல்லாம் பின்னணியில் திவாகரன் இருப்பதாக சலசலக்கப்பட்டாலும்கூட, இந்த முடிவை பாஜக ஏற்குமா? என்று தெரியவில்லை.
காரணம், டிடிவி தினகரனுக்கென்று தென்மண்டலங்களில் தனி வாக்கு சதவீதம் உள்ளது.. கடந்த முறை திமுகவின் வாக்கு வங்கியை பிரித்ததில் தினகரனுக்கு பெரும்பங்கு உள்ளதையும் மறுக்க முடியாது. அந்தவகையில், இந்த முறை தினகரனை கூட்டணியில் தவிர்க்கவே முடியாது என்கிறார்கள்.. எனினும், இந்த செல்வாக்கு சசிகலாவுக்கு இருக்கிறதா? என்பதை உறுதியாகவும் சொல்ல முடியாது.
பொறுமை: எனினும், ஏற்கனவே தன்மீது முக்குலத்தோர் அதிருப்தியில் உள்ளதால், சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவருவதன் மூலம், அந்த அதிருப்தி லேசாக நீங்கும் என்றும் எடப்பாடி கணக்கு போடுகிறாராம். ஒருவேளை அதிமுகவுக்குள் சசிகலா வரும்பட்சத்தில், அதிமுகவின் விரிசல்கள் ஓரளவுக்கு குறையும் என்று நம்பலாம். அதேசமயம், இத்தனை காலமும் அமைதி காத்து வந்த சசிகலாவின் பொறுமைக்கும், முழு அர்த்தம் கிடைத்தது போலாகிவிடும்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications