இந்த திமுக இப்படித்தான்.. உண்மையை சொன்னாலே அவ்வளவுதான்.. எடப்பாடி பழனிசாமிக்கு வந்த கோபம்..!
எடப்பாடி பழனிசாமி திமுக மீது விமர்சனம் வைத்துள்ளார்
சென்னை: உண்மையை சொன்னால், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கை திமுக போட்டுவிடுகிறது.. ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி இந்த ஆட்சியில் தொடர்கிறது.. முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ள கருத்து திமுக வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
நடந்த சம்பவம் இதுதான்:
சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் குப்புசாமி.. திருத்தணியில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.. இவரது அப்பா நந்தன்.
அதிமுக திருத்தணி 15வது வட்ட துணை செயலாளராக உள்ளார்... அத்துடன் மனித உரிமை கமிஷனின் மாவட்ட செயலாளராகவும் வேலை பார்த்து வருகிறார்..

புளியில் பல்லி
இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தமிழக அரசு தந்துவரும் பொங்கல் தொகுப்பை பெற்றிருக்கிறார்.. அந்த பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில், இறந்துபோன பல்லி இருந்துள்ளது.. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தன், ரேஷன் கடை ஊழியர்களிடம் இதை பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்.. மேலும், புளியில் பல்லி இருந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவிலும் வெளியாகின... இதையடுத்து, ரேஷன் கடை விற்பனையாளர் சரவணன் பொய் பிரசாரம் மூலம் அவதூறு பரப்புவதாக சொல்லி, நந்தன் மீது திருத்தணி போலீசில் புகார் தந்தார்.

தற்கொலை
அதன்பேரில் போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு நந்தன் மீது வழக்கு பதிவு செய்தனர்.. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நந்தனின் மகன் குப்புசாமி திடீரென, தற்கொலை செய்து கொண்டார்.. தன்னுடைய வீட்டிலேயே ரூம் கதவை மூடிக்கொண்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்... அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிசி சிகிச்சை தந்தும், பலனின்றி இறந்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

காட்டமான பதிவு
இதுகுறித்துதான் அதிமுக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை திரு.நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற திரு.குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

திமுக அரசு
அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும், தெரிவித்து கொள்கிறேன்.. வலைத்தளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுக ஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது.. கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது! இது தற்கொலை அல்ல, ஜனநாயக படுகொலை! " என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்... எடப்பாடி பதிவிட்ட இந்த ட்வீட்டானது, திமுக தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாஜக
இதைதான் பாஜகவும் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறது.. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசும்போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது... இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படுதோல்வி அடைவது உறுதி... பொங்கலுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொருட்களில் உள்ள புளியில் பல்லி இருந்திருக்கிறது.. அந்த பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது.. எனவே குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications