அடுத்தடுத்து ஆக்ஷன்.. இன்னொரு வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு- ஓபிஎஸ்ஸை விட்டுட்டு தனியா!
சென்னை : அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி ஆகியோருக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்துள்ளார்.
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்று வழக்கை பட்டியலிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீது நான்கு வாரங்களில் பதிலளிக்க ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமிக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வேண்டி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களுக்கு வழக்கு தொடர அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.
அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் பிரதிநிதியாக அந்த மனுவை தாக்கல் செய்வதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதிமுக தொண்டர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் அவர்கள் இருவருக்கும் கிடையாது என ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் அப்போது கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த பதிலை ஏற்க மறுத்து, அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அவர்களுக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனியாக மேல் முறையீடு செய்துள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications