எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அறப்போர் இயக்கத்தின் டெண்டர் முறைகேடு வழக்கு! டிச.11-க்கு ஒத்திவைப்பு
சென்னை: அறப்போர் இயக்கம் தெரிவித்த நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகாருக்கு எதிரான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கடந்த 2016 - 2021 ம் அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையில் பல்வேறு முறைகேடுகளை செய்தார் என புகார்கள் எழுந்தது

குறிப்பாக தஞ்சை, கோவை, சிவகங்கை உள்ளிட்டப்பகுதிகளுக்கான நெடுஞ்சாலை துறை டெண்டர் விதிகளை மீறி 692 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தது.
அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக கூறி தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட ஈடுகோரி வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்..

இதனை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தடை விதிக்கப்பட்டது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என அறப்போர் இயக்கத்தின் வாதத்தை ஏற்று இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி மகாலெட்சுமி முன் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராகி சாட்சியம், ஆதாரங்களை அளித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எடப்பாடி பழனிச்சாமி டிசம்பர் 11 ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications