அண்ணாமலைக்கு எதிராக இறங்கும் வேலுமணி.. 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்த எடப்பாடி!
சென்னை : நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி களமிறக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் உள்ளன. திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக 33 தொகுதிகளிலும், தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியிலும், எஸ்டிபிஐ நெல்லை முபாரக் திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அதிமுகவுக்கு தேர்தல் பணியாற்ற, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்தில் இருந்து பணிகளை முறைப்படுத்தும் தேர்தல் பொறுப்பாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி, கோவை, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நாமக்கல், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அ.தி.மு.க எம்.பி. சி.வி.சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி தொகுதிக்கு கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி, அசோக்குமார் ஆகியோரும், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தம்பிதுரை, முக்கூர் சுப்பிரமணியன், கே.சி.வீரமணி, அப்பு, வேலழகன் ஆகியோரும், அரக்கோணம் தொகுதிக்கு கே.சி.வீரமணி, கோ.அரி, அரக்கோணம் ரவி, சுகுமார் ஆகியோரும், திண்டுக்கல் தொகுதிக்கு திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும், திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு பி.வேணுகோபால், அப்துல் ரஹீம், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. நீலகிரி தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அதிமுகவின் லோகேஷ் தமிழ்ச்செல்வன் களமிறங்கும் நிலையில், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளுக்கு எஸ்.பி வேலுமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தேர்தல் பணிக்குழுவிலும் வேலுமணி இடம்பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் 6 இடங்களில் திமுக - அதிமுக - பாஜக இடையே நேருக்கு நேர் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், 40 தொகுதிகளுக்கும் அதிமுக சீனியர்கள், முன்னாள் அமைச்சர்கள் கொண்ட ஃபோர்ஸை இறக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications