"பொங்கல் ஆபரேஷன்".. ஓ பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி போடும் பெரிய முட்டுக்கட்டை..ஆஹா புதுசா இருக்கே!
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக எடப்பாடி பழனிசாமி முக்கியமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. குளிர்கால விடுமுறைக்கு பின்பாக மனுக்கள் விசாரணை செய்யப்படும்.

கூட்டம்
இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் டிசம்பர் 21ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தை அவர் நடத்த முக்கியமான காரணம் உள்ளது. அதிமுகவில் இவர் தனியாக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆகியோரை நியமனம் செய்து வருகிறார். இந்த மாவட்ட செயலாளர்களை வைத்து ஓ பன்னீர்செல்வம் நடத்தும் கூட்டம் தொடர்பான புகைப்படங்கள், ரிப்போர்ட்கள் உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் சமர்ப்பிக்கும் எழுத்துபூர்வமான வாதத்தோடு சமர்ப்பிக்கப்படும். அதில்.. என் பக்கமும் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள். கட்சியில் இரண்டு குழுக்கள் இருக்கிறது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க இந்த கூட்டத்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி
ஓ பன்னீர்செல்வம் ஒரு பக்கம் மாவட்ட செயலாளர் கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி பொங்கலுக்காக முக்கியமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது அதிமுகவில் நட்சத்திர பேச்சாளர்கள், சீனியர்கள் பேச்சாளர்கள், எம்ஜிஆர் காலத்தில் இருந்த மூத்த நிர்வாகிகள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்த காலத்தில் இவர்களை அடிக்கடி சந்திப்பார். குறைந்தது 5 வருடத்திற்கு இரண்டு முறை தேர்தலுக்கு இடையே சந்திப்பார். இந்த சமயங்களில் எல்லாம் அவர்களுக்கு பணம் கொடுப்பார். இதனால் ஒரு குழுவை மட்டும் அங்கீகரிக்கவே கூடாது. எனக்கு ஆதரவு இருக்கிறது பாருங்கள் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பண்டிகை
அதன்பின் பண்டிகை காலங்களிலும் கூட அவ்வப்போது இவர்களுக்கு ஜெயலலிதா பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்து இருந்தார். ஆனால் ஜெயலலிதா மரணத்திற்கு பின் இவர்களை கட்சி நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை. உட்கட்சி மோதல் காரணமாக கட்சி நிர்வாகிகள் யாரும் இவர்களுக்கு போதிய மதிப்பை கொடுக்கவில்லை. இதில் சில மூத்த நிர்வாகிகள், பேச்சாளர்கள் கூட வெளிப்படையாக தங்கள் வருத்தங்களை பதிவு செய்து இருந்தனர்.

பொங்கல் கூட்டம்
இந்த நிலையில்தான் பொங்கலுக்கு இந்த நிர்வாகிகள் எல்லோரையும் எடப்பாடி சந்திக்க உள்ளார். சென்னையில் உள்ள நிர்வாகிகளை எடப்பாடி சந்தித்து அவர்களுக்கு பணம் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. அதன்பின் மாவட்ட அளவில் மற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் சார்பாக பணம் கொடுக்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா போய்விட்டார். உங்களுக்கு எல்லாம் நான் இருக்கிறேன். அதிமுகவின் ஒற்றை தலைமை நான்தான் என்பதை நிரூபிக்க எடப்பாடி இவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications