கொங்குவிலிருந்து சசிகலாவுக்கான ஆதரவு குரல்.. சேலத்தில் அவசர ஆலோசனை!.. இபிஎஸ் எடுக்கும் முடிவு என்ன?
சென்னை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான ஆதரவு குரல் எழுந்துள்ளதால் சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மீண்டும் ஒற்றை தலைமை என்ற பேச்சு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக மாவட்டச் செயலாளர் எம். சையதுகான் தலைமை வகிததார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னிலை வகித்தார்.

சசிகலா
இந்த கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கருத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் வலியுறுத்தினர்.

தேர்தல் தோல்வி
அதிமுக பிளவுப்பட்டுள்ளதால் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் நிபந்தனையற்றப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஓபிஎஸ் முன்பு தேனி மாவட்ட அதிமுகவினர் வலுவாக சொல்லியுள்ளனர்.

சசிகலாவை ஓபிஎஸ் சந்திப்பாரா
இந்த நிலையில் ஓபிஎஸ் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கட்சி மாறும் தொண்டர்களை தக்க வைத்துக் கொள்ளவும் அவர் நிச்சயம் சசிகலாவை சந்திப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் தர்மயுத்தத்தின் போது ஓபிஎஸ்ஸுக்கு முதல் ஆளாக போய் ஆதரவு தெரிவித்த கோவையை சேர்ந்த சூலூர் எம்எல்ஏவாக இருந்த ஆறுகுட்டி, தற்போது சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும்.

கொங்கு மண்டலம்
சசிகலா, டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக ஒன்றுபட வேண்டும், தோற்றதற்கு காரணம் தனித்தனியாக இருந்ததால் தான், கொங்கு மண்டலமே கையைவிட்டு போயிடுச்சு என தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் எம்பி அன்வர் ராஜாவும் சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்த பேச்சை எடுத்திருந்தார்.

தேனி மாவட்டம்
இதற்கு அடுத்து தேனி மாவட்டத்தினர், கோவை முன்னாள் எம்எல்ஏ என அடுத்தடுத்து சசிகலா இணைப்பு குரலை வலுத்து வருவதால் சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
Recommended Video

எடப்பாடி ஆலோசனை ஏன்?
இந்த கூட்டத்தில் எந்தமாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என தெரியவில்லை. ஒரு வேளை ஏற்கெனவே சசிகலா குறித்து பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்கியது போல் இந்த முறை யாரெல்லாம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறார்களோ அவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கிவிடலாம் என்ற முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பாரா, ஒரு வேளை அவர் அவ்வாறு எடுக்கும் முடிவுக்கு ஓபிஎஸ் ஒத்துழைப்பு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications