2 பக்கம் இருந்து வந்த வலை.. இழுக்க நடந்த முயற்சிகள்.. அசராத அன்வர் ராஜா.. நடந்தது என்ன?
சென்னை: அன்வர் ராஜாவை சசிகலாவை சந்திக்குமாறு சிலரும், திமுகவில் இணையுமாறு சிலரும் யோசனைகள் கொடுத்த நிலையில், அதிமுகவின் எதிர்காலத்தை அன்றே கணித்து அமைதி காத்ததால் இன்று மீண்டும் அவரை அழைத்து முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலத்து சீனியரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து கட்டம் கட்டினார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து அன்வர் ராஜா திமுகவில் இணையப்போகிறார் என தகவல்கள் உலா வந்தன.

அன்வர் ராஜாவை திமுகவில் இணைக்க அவரது பழைய அதிமுக கூட்டாளியும், தற்போதைய திமுக அமைச்சருமான ராஜகண்ணப்பன் ஆர்வம் காட்டினாலும் மாவட்டச் செயலாளர் தரப்பு கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. அதற்கு காரணம் அன்வர் ராஜாவுக்கு என ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த செல்வாக்கும் கிடையாது என்பது தான்.
குறிப்பாக அவர் சார்ந்திருக்கும் இஸ்லாமிய சமுதாய மக்கள் மத்தியிலேயே அவருக்கு பெரியளவில் எந்த செல்வாக்கும் இல்லை எனக் கருதிய ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் தரப்பு, அன்வரை திமுகவில் இணைத்து அவருக்கு பதவியை தூக்கி கொடுக்க விரும்பவில்லை. இதனால் அன்வர் ராஜா வரவை அவர் பெரிதாக பார்க்கவில்லை.

அதிமுகவிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டோம், திமுகவிலும் ரெஸ்பான்ஸ் இல்லை அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த அன்வர் ராஜாவுக்கு, அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் சசிகலாவை சந்திக்கும் படி ஐடியா கொடுத்தனர். ஆனால் ஏனோ அவர் அப்படி செய்யவில்லை. காரணம் கட்சியும், சின்னமும் எடப்பாடி பக்கம் தான் வரும் என்பதை தனக்கே உரிய அரசியல் முதிர்ச்சி காரணமாக அன்றே யூகித்துக் கொண்டார் அன்வர் ராஜா.

அதனால் தான் ஆழ்ந்த மவுனம் காக்கத் தொடங்கினார் அன்வர் ராஜா. அவரது மவுனம் எடப்பாடி பழனிசாமியை அசைத்து பார்க்கத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீமையும், தமிழ் மகன் உசேனையும் விட்டால் அதிமுகவில் இஸ்லாமிய சமுதாய பிரமுகர்கள் என்று பெரிதாக யாரும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் இந்த நேரத்தில் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்தால் அது ப்ளஸ் தான் என ஆலோசகர்கள் எடுத்துக் கூற, கடைசியாக பாயை வரச்சொல்லுங்க என அன்வர் ராஜாவை அரவணைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications