எடப்பாடியை சூழ்ந்த பெரும் சுழல்! ஆளுநர் மேஜையில் என்ன அது? இதனாலதான் "கப்சிப்புனு" இருக்காரா! ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் என்ன சொல்லி எடப்பாடி வாக்கு கேட்பார். மோடி வேண்டும் என்று சொல்லி கேட்க வேண்டும்., மோடி வேண்டாம் என்று சொல்லி கேட்க வேண்டும். இது லோக்சபா தேர்தல். இது இரண்டில் ஒன்றை சொல்லாமல் அவர் வாக்கு கேட்டால் யார் வாக்களிப்பார்கள்? எப்படி அதிமுக வெல்ல முடியும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பி உள்ளார்.

நேற்று பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேட்டி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Edappadi Palanisamy is afraid of files on the table of Governor RN Ravi: What will happen next?

பேட்டி: அதில்., எடப்பாடி பெரிய சந்தர்ப்பவாதி. சிஏஏ சட்டத்தை ஆதரித்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும் கூட எடப்பாடி பழனிசாமி அதை ஆதரித்தார். கூட்டணி தர்மத்திற்காக இதை ஆதரித்தோம் என்று அவர் கூறுவது பெரிய தவறு. எடப்பாடி இப்படி செய்திருக்கவே கூடாது. இப்போது இஸ்லாமியர்களை கவர வேண்டும். இஸ்லாமியர்களை ஈர்க்க வேண்டும். அவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது போல நடிக்க எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுகிறார். இதெல்லாம் நியாயம் இல்லை.

( எம்ஜிஆர் 2.0.. அமித் ஷாவிடம் தந்த உறுதி! விஜயை பாஜக கூட்டணியில் சேர்க்க முடிவு? போனை போடும் அண்ணாமலை)

அவர் அன்று வாக்கு கொடுக்காமல் வெளியேறி இருக்கலாம். ஆனால் அதிமுகவினர் வாக்கை புறக்கணிக்கவில்லை. மாறாக சிஏஏவை ஆதரித்து வாக்களித்தனர். இது எவ்வளவு பெரிய தவறு. இப்போது இஸ்லாமியர்களை பற்றி பேசினால் அவர்கள் நம்பிவிடுவார்களா? என்ன கொடுமை இது? பாஜகவுடன் இவர் சேர மாட்டார் என்று சொல்ல முடியுமா? அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராகவே இருந்துள்ளார். அப்படி இருக்க அவர் தேர்தல் நேரத்தில் பாஜகவுடன் இணைய மாட்டார் என்று சொல்ல முடியுமா ?

அவர் செய்ததை எல்லாம் சிறுபான்மையினர் பார்த்தனர். அவரை எப்படி நம்புவார்கள் . அடுத்த 2-3 வருடம் எடப்பாடி கடுமையாக உழைக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு இவர்கள் தேர்தல் தாண்டி பணிகளை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம்பிக்கை அதிமுகவிற்கு கிடைக்கும். சிறுபான்மையினரை விடுங்கள்.. கூட்டணி தர்மத்திற்காகவா இவர்கள் வாக்களித்தனர்? அதிமுக வாக்களித்தது தங்களை பாதுகாத்துக்கொள்ள. தங்கள் அரசுக்கு பிரச்சனை இருக்க கூடாது. தங்கள் வழக்கு மீது பாஜக நடவடிக்கை எடுக்க கூடாது என்று இப்படி செய்தனர்.,

Edappadi Palanisamy is afraid of files on the table of Governor RN Ravi: What will happen next?

எடப்பாடி மோடி: இப்போது கூட எடப்பாடி மோடியை எதிர்க்கவில்லை. ஏன் தெரியுமா? ஆளுநர் மேஜையில் மாஜி அமைச்சர்களுக்கு எதிரான ஆவணங்கள் உள்ளன. விசாரணைக்கு அனுமதி கேட்ட ஆவணங்கள் உள்ளன. இதில் ஆளுநர் அனுமதி கொடுத்தால் பிரச்சனை. அதனால்தான் இப்போதும் எடப்பாடி அமைதியாக இருக்கும். எடப்பாடிக்கு அந்த பயம் இருக்கிறது., இப்போது கூட ரெய்டு விடுபடலாம். அதனால்தான் மோடியை எதிர்க்க எடப்பாடி அஞ்சுகிறார். அப்படி இருக்க சிறுபான்மையினரை எடப்பாடி எப்படி நம்ப முடியும்.

அதேபோல் லோக்சபா தேர்தலில் என்ன சொல்லி எடப்பாடி வாக்கு கேட்பார். மோடி வேண்டும் என்று சொல்லி கேட்க வேண்டும்., மோடி வேண்டாம் என்று சொல்லி கேட்க வேண்டும். இது லோக்சபா தேர்தல். இது இரண்டில் ஒன்றை சொல்லாமல் அவர் வாக்கு கேட்டால் யார் வாக்களிப்பார்கள்? எப்படி அதிமுக வெல்ல முடியும். இது சட்டசபை தேர்தல் கிடையாது. லோக்சபா தேர்தல். அப்படி இருக்க மோடியை எதிர்க்க மாட்டோம்.. அவரை ஆதரித்தும் பேச மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி இருப்பது எப்படி அதிமுகவிற்கு உதவும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+