Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்ஜிஆர் 2.0.. அமித் ஷாவிடம் தந்த உறுதி! விஜயை பாஜக கூட்டணியில் சேர்க்க முடிவு? போனை போடும் அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணி அமைப்பதற்கான பணிகளை செய்து வருகிறது. விரைவில் இந்த கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில்தான் நடிகர் விஜய்யை பாஜக தரப்பு அணுகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், விஜயின் பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியாகும் செய்திகள் எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி. நடிகர் விஜயின் பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு வெளியாகும் செய்திக்கு மறுப்பை தெரிவிக்கிறோம் என்று விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சரமாரி விமர்சனங்களை வைத்துவிட்டு அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார்.

அண்ணாமலையின் பேச்சு அதிமுக மூத்த தலைவர்களை விமர்சனம் செய்யும் விதமாக உள்ளது . அவர் சொல்லும் கருத்துக்களை அதிமுக தொண்டர்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. அதிமுக தொண்டர்களை மதிக்கும் விதமாக பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொள்கிறோம்.

BJP Chief Annamalai is reportedly talking with Actor Vijay for an possible alliance in Tamil Nadu

அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கூட்டணியை முறித்துக்கொள்கிறோம் என்று அதிமுக அறிவித்தது. அதோடு இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை. 2026 லோக்சபா தேர்தலிலும் கூட்டணி இல்லை. இது அதிமுகவின் கூட்டணி முடிவு இல்லை. தொண்டர்களின் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அண்ணாமலை உறுதி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றார். அங்கே அவர் மத்திய பாஜக தலைவர்களை சந்தித்தார். அதில், தமிழ்நாட்டில் அதிமுக இல்லாமலும் பாஜக வெற்றிபெற முடியும். அதிமுக தேவை கிடையாது. அவர்கள் இருந்தும் கடந்த லோக்சபா தேர்தலில் நாம் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

( இறங்கி ஆடுங்க.. அண்ணாமலைக்கு பச்சை கொடி.. முழு ஆசிர்வாதம் தந்த டெல்லி.. பயங்கர முடிவாகிடுச்சே! )

அப்படி இருக்க நாம் அதிமுக இல்லாமலே போட்டியிட முடியும். அதோடு பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்து உள்ளது. நம்முடைய தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும். பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தால்தான் பாஜக பெரிதாக வளரும். அதனால் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அண்ணாமலை டெல்லியில் கூறியதாக தெரிகிறது.

அண்ணாமலை பிளான்: அதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் விஜயை கொண்டு வர அண்ணாமலை திட்டமிட்டதாக கூறப்படுகிறது. விஜயின் மக்கள் இயக்கத்தை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர அண்ணாமலை திட்டமிட்டுள்ளாராம்.

BJP Chief Annamalai is reportedly talking with Actor Vijay for an possible alliance in Tamil Nadu

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. நேரு அரங்கில் நடக்க இருந்த விழா அதிக டிக்கெட் விற்பனை, போலி டிக்கெட் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதே சமயம் அவரின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அரசியல் ரீதியாகவே அனுமதி கொடுக்கவில்லை. திமுக அரசுதான் இதை செய்கிறது என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்காக #DMKFearsThalapathyVIJAY என்ற டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நடித்து அக்டோபரில் வெளியாகவிருக்கும் படம் லியோ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி 30-ந்தேதி நடக்கவிருந்தது. அந்த நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் நேற்று நடக்கவில்லை. சோஷியல் மீடியா: இந்த சம்பவம் விஜய் ரசிகர்களை ஆத்திரப்பட வைத்தது. திமுகவின் மிரட்டல் அரசியல்தான் காரணம் என சோசியல் மீடியாக்களிடம் கொந்தளித்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

இதனால் விஜய் vs திமுக என்ற நிலை உள்ளது. ஏற்கனவே அதிமுக - விஜய் இடையே சர்க்கார் படத்தில் பிரச்சனை வந்தது. முன்பு ஜோசப் விஜய் பிரச்சனையில் பாஜக - விஜய் இடையே மோதல் இருந்தாலும்.. அதற்கு சமாதானம் சொல்லி அவரை கட்சிக்குள் கூட்டணி சேர்க்க அண்ணாமலை முயல இருக்கிறாராம். எப்போது வேண்டுமானாலும் அண்ணாமலை விஜய்க்கு போன் போடலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக எம்ஜிஆர் இருந்தார்.. அதேபோல் ஸ்டாலினுக்கு எதிராக ரஜினியை கொண்டு வர பாஜக முயன்றது. இந்த நிலையில்தான் எம்ஜிஆர் 2.0 ஆக விஜயை கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மறுப்பு: அதே சமயம், விஜயின் பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியாகும் செய்திகள் எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி. நடிகர் விஜயின் பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு வெளியாகும் செய்திக்கு மறுப்பை தெரிவிக்கிறோம் என்று விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+