இறங்கி ஆடுங்க.. அண்ணாமலைக்கு பச்சை கொடி.. முழு ஆசிர்வாதம் தந்த டெல்லி.. பயங்கர முடிவாகிடுச்சே!
சென்னை: அண்ணாமலைக்கு டெல்லி ஆசிர்வாதம் இருக்கிறது. எனக்கு டெல்லி சோர்ஸ் இதுதான் சொன்னது. தேசிய தலைமையின் பரிபூரண ஆதரவு அவருக்கு இருக்கிறது, என்று மூத்த பத்திரிகையாளர் பா.கி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த பல்வேறு கூட்டங்களில் , ஆலோசனைகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அண்ணாமலை சந்தித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பா.கி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அண்ணாமலை தலைமையில் பாஜக தனித்து நிற்பது உடனடியாக பலன் அளிக்காது. அது லேட்டாகும். இது ஆசிட் டெஸ்ட்தான். ஆனால் அண்ணாமலை வந்தே போதே இதற்கு தயாராகிவிட்டனர். அண்ணாமலை வந்தே போதே.. முதல் நாளில் இருந்தே பாஜகவை இதற்காக தயார் செய்து வருகிறார்கள். அப்போதே அவர் இதற்காக பாஜகவை தயார் செய்துவிட்டார். பாஜக அதன்பின் செய்தது எல்லாம் இதை பற்றித்தான். பாஜகவின் தலைவர்கள் இதுவரை இருந்தது போல் இல்லாமல் அண்ணாமலை வேறு மாதிரி இருக்கிறார்.

அண்ணாமலை நிலைப்பாடு: அவர் கொள்கையை மக்களிடம் தீவிரமாக கொண்டு செல்கிறார். மக்களிடம் தீவிரமாக தனது கருத்துக்களை சொல்லி வருகிறார். அவர் திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். அதிமுக இல்லாமல் திமுகவை எதிர்க்க பாஜக ரெடி. அண்ணாமலைக்கு டெல்லி ஆசிர்வாதம் இருக்கிறது. எனக்கு டெல்லி சோர்ஸ் இதுதான் சொன்னது. தேசிய தலைமையின் பரிபூரண ஆதரவு அவருக்கு இருக்கிறது. டெல்லி முழு ஆதரவு கொடுப்பதால் அவர் தைரியமாக இருக்கிறார். டெல்லி சோர்ஸ் சொன்னது இதுதான்.
அண்ணாமலையிடம் டெல்லியில் விளக்கம் கேட்டுள்ளனர். அதை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் சொன்னதை நிர்மலஸ் சீதாராமன் மூலம் கிராஸ் செய்து உள்ளனர். அண்ணாமலை சொன்னது சரிதான் என்று கண்டுபிடித்து உள்ளனர். நீங்கள் சொன்னது சரிதான். நீங்கள் வேலையை பாருங்கள். நீங்கள் பேசியது சரிதான் என்று அனுப்பி வைத்துள்ளனர். அதனால் அண்ணாமலையை மாற்ற வேண்டிய நிலை வராது. வடமாநிலங்களில்தான் பாஜகவிற்கு அதைக் சீட் வரும். அதனால் அங்கே பாஜக கவனம் செலுத்தும்.
( பாஜக + பாமக.. தமிழ்நாடு அரசியலே மாறப்போகுது.. அதிமுகவிற்கு பேரிடியாக மாறிய செய்தி.. போச்சே)
எவ்வளவு சீட் வரும்: அங்கே சீட் வரும் என்பதால் தமிழ்நாட்டில் பாஜக கவனம் செலுத்தாது. இதனால் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடலாம் என்று நினைக்கிறார்கள். அதிமுகவுடன் இருந்தால் கூட வெல்ல மாட்டோம். அதற்கு தனியாக நிற்கலாம். பலத்தை சோதித்து பார்க்கலாம் . தமிழ்நாட்டில் பாஜகவின் பலத்தை பார்ப்போம் என்று அண்ணாமலையை நம்பி பாஜகவை தனியாக களமிறக்கி உள்ளனர். அண்ணாமலை பற்றி விளக்கம் கேட்டுள்ளனர். அண்ணாமலை சொன்ன விளக்கத்தை கேட்டுள்ளனர்.

அவரை தாக்கி பேசவில்லை. இதனால் அண்ணாமலையை நீக்கும் வாய்ப்பு குறைவு. அதிமுகவை வெளிப்படையாக தாக்கி பேசியது அண்ணாமலைதான். அதிமுகவிற்கு இதெல்லாம் ஆதங்கமாக இருந்துள்ளது. இப்போது அண்ணாமலை வலிமையாக பேசி வருகிறார். அதை அதிமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வங்கியை உயர்த்துவோம். வாக்கு வங்கி முக்கியம். அதை உயர்த்துவோம்.. வெல்வோமோ இல்லையோ.. தனியாக போட்டியிடுவோம் என்று பாஜக தைரியமாக களமிறங்கி வருகிறது.
அண்ணாமலை வந்தே போதே.. முதல் நாளில் இருந்தே பாஜகவை இதற்காக தயார் செய்து வருகிறார்கள். அப்போதே அவர் இதற்காக பாஜகவை தயார் செய்துவிட்டார். அதனால் அண்ணாமலையை மாற்ற வாய்ப்பே இல்லை, என்று மூத்த பத்திரிகையாளர் பா.கி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications