பாஜக + பாமக.. தமிழ்நாடு அரசியலே மாறப்போகுது.. அதிமுகவிற்கு பேரிடியாக மாறிய செய்தி.. போச்சே
சென்னை: அதிமுகவால் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பதை உறுதியாக நிரூபிக்க முடியவில்லை. அந்த எதிர்க்கட்சி இடத்தை அண்ணாமலை பிடித்துக்கொண்டார். இதனால் திமுகவிற்கு எதிரான வாக்குகள் கண்டிப்பாக பிரியும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி மோதல் உச்சம் அடைந்த நிலையில் கூட்டணி மோதலுக்கு நேற்று மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன்படி பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்தது.
டெல்லியில் சமாதான பேச்சு, சென்னையில் நடந்த சமாதான பேச்சுக்கள் எல்லாம் தோல்வியில் முடிந்த நிலையில்தான் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது. முக்கியமாக அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவிற்கு வந்துள்ளார். இதை தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளது. இந்த கூட்டணி முறிவு தொடர்பாக பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

என்ன நடந்தது?: அதில், அதிமுக பாஜக மோதலுக்கு நிறைய காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் எந்த காரணமும் நம்பும்படியாக இல்லை. அமித் ஷா எடப்பாடி சந்திப்பில் இவர்கள் ஏதோ பேசி உள்ளனர். அந்த பேச்சுக்கள்தான் இவர்கள் இடையிலான மோதலுக்கு முக்கியமான காரணம். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் பாஜகவில் சீனியர்கள் சிலர் அண்ணாமலை மீது அப்செட்டில் உள்ளனர். இவர்கள் காலம் காலமாக பாஜகவில் இருப்பவர்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து இவர்கள் பாஜகவுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
இப்போது வெளியில் இருந்து ஒருவரை கொண்டு வந்து தலைவர் ஆக்கி உள்ளனர். ஆனால் அவரை கூட ஏற்றுக்கொண்டு விட்டனர். ஆனால் அண்ணாமலையின் செயல்பாடுகள்தான் அவர்களுக்கு பிடிக்கவில்லை. யார் தலைவராக வந்தாலும் இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அண்ணாமலையை கூட ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அண்ணாமலையின் செயல்பாடுகளை இவர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் அதிமுகவுடன் கூட்டணி உறவை அண்ணாமலை முறித்ததை சீனியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்போதைக்கு அண்ணாமலை அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனால் அவர் அதிமுக பற்றி பேசாமல் அமைதியாக இருப்பார். அவ்வளவுதான். அதிமுக - பாஜக தனியாக நின்றால் எதிர்க்கட்சி 3 ஆக பிரியும். திமுக ஒரு வாக்கு.. பாஜக ஒரு வாக்கு .. நாம் தமிழர் ஒரு வாக்கு என்று பெறும். மீதம் உள்ளதே அதிமுகவிற்கு செல்லும். இந்த தேர்தலில் அண்ணாமலை ரிஸ்க் எடுக்க கூடாது என்று பாஜக நினைக்கிறது. சோதனை செய்து பார்க்க இது சரியான தேர்தல் கிடையாது என்று பாஜக நினைக்கிறது.

பின்னணி: அதனால் இப்போதைக்கு அண்ணாமலை காலை கட்டிப்போட்டு உள்ளனர். பாஜக - திமுகதான் அடுத்த தேர்தல் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இப்படி அண்ணாமலை கூறியது சரிதான். அண்ணாமலை தொடர்ந்து உண்மையோ, பொய்யோ திமுகவை எதிர்க்கிறார். உண்மைக்கு மாறான தகவலை அவர் சொன்னாலும் கூட திமுகவை எதிர்க்கிறார். பாஜக இதுவரை செய்யாததை எல்லாம் செய்து கட்சியை வளர்க்க அவர் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார்.
இதனால் அதிமுகவிற்கு பிரச்சனை. அதிமுகவில் இப்போதுதான் உட்கட்சி பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. இதனால் எடப்பாடியால் கட்சியை வளர்க்க முடியவில்லை. இதனால்தான் அண்ணாமலை பாஜக vs திமுக உள்ளது என்று கூறுகிறார். ஆனால் பாஜகவிடம் எவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்று தெரியவில்லை. அதிமுக கடந்த 2 வருடமாக திமுகவை எதிர்க்கவில்லை. மாறாக உட்கட்சி பிரச்னையை எதிர்கொண்டனர். அதை சமாளிக்கவே எடப்பாடி பழனிசாமிக்கு சரியாக இருந்தது.
அதிமுகவால் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பதை உறுதியாக நிரூபிக்க முடியவில்லை. அந்த எதிர்க்கட்சி இடத்தை அண்ணாமலை பிடித்துக்கொண்டார். இதனால் திமுகவிற்கு எதிரான வாக்குகள் கண்டிப்பாக பிரியும். இதனால் சில வட மாவட்டங்களில் அதிமுக நான்காவது இடத்திற்கு செல்லும். கொங்கு மண்டலத்தில் இரண்டாம் இடத்திற்கு வரும். டெல்டா மாவட்டங்களில் கூட அதிமுக 4ம் இடத்திற்கு செல்லும். தென் மண்டலத்திலும் 3ம் இடத்திற்கு போகலாம். இங்கெல்லாம் பாஜக இரண்டாம் இடத்திற்கு கூட வரலாம். கொங்கில் சில இடங்களில் மோடி வர வேண்டும் என்று நினைப்பவர்கள்.. பாஜகவை இரண்டாம் இடத்திற்கு, கொண்டு செல்லலாம், பாஜகவில் பாமக உள்ளதால் வடக்கில் அவர்கள் இரண்டாம் இடத்திற்கு வருவார்கள் என்று பிரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications