மோடிக்கு போன பரபரப்பு லெட்டர்.. ஒரே ஒரு தலைவரின் மெகா மூவ்.. அப்படியே மிரண்டு போன அண்ணாமலை, எடப்பாடி!
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததில் அதிகம் கவலைப்படுகிறாராம் ஜி.கே. வாசன். இந்த கூட்டணியின் சார்பில், ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார்.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. ஒரு சில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தவிர மாநகராட்சி எதிலும் அதிமுக வெற்றிபெற முடியவில்லை. பாஜகவும் வெற்றிபெற முடியவில்லை. முக்கியமாக கோவையில் 10 இடங்களில் 10க்கு 10 என்று எம்எல்ஏ சீட்டுகளை வென்ற அதிமுக - பாஜக கூட்டணியால் மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக பாஜக மோதல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக கூட்டணி முறிவிற்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததில் அதிகம் கவலைப்படுகிறாராம் ஜி.கே. வாசன். இந்த கூட்டணியின் சார்பில், ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார்.
மரியாதை: மோடி மீது எந்தளவுக்கு மரியாதை வைத்திருக்கிறாரோ அந்தளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி மீதும் வைத்திருப்பவர் வாசன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் 1 சீட் வாங்கி அதனை தனது கட்சியினருக்கு தர வேண்டும் என கணக்குப் போட்டிருந்தார் வாசன். அது வெற்றியைத்தரும் என்றும் திட்டமிட்டிருந்தார். அதனால்தான் கூட்டணி முறிந்ததில் அவர் கவலைப்பட்டிருக்கிறார்.

, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி உருவானாலும் வாசன் கட்சிக்கு சீட் கிடைக்கும் ; அதில் பிரச்சனை இல்லை. ஆனால், ஜெயிக்க முடியுமா? என்றுதான் யோசிக்கிறாராம். இந்த நிலையில், அதிமுகவுடான கூட்டணி முறிவு குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளாராம் வாசன். குறிப்பாக, ''கூட்டணி உறவு உடைந்திருப்பது துரதிர்ஷ்டமானது. அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி உருவாவது தமிழகத்துக்கு நல்லது'' என்கிற ரீதியில் வாசன் குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள் த.மா.கா.வினர்.
இதற்கிடையே, பாஜகவுடன் கூட்டணியை அதிமுக துண்டித்துக் கொண்ட நிலையில், எடப்பாடிக்கு சாதகமான ஆதரவு நிலையை எடுக்காமல், பாஜக பக்கமே நிற்கிறார் வாசன். ஆனால், அவரிடம் விவாதிக்கும் த.மா.கா. நிர்வாகிகள், ''பாஜக தலைமையும் எடப்பாடியும் பேசி வைத்துக் கொண்டு இந்த உடைப்பு முயற்சியை எடுத்திருக்கிறார்களோ என தோன்றுகிறது. திமுக கூட்டணிக்கு பலம் என்பது சிறுபான்மையினரின் வாக்குகள்தான். பாஜக வுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினரின் வாக்குகள் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் விழுகிறது. திமுக காங்கிரசை பலகீனமாக்க அந்த வாக்குகள் சிதற வேண்டும் என ஆராய்ந்து தான் இந்த கூட்டணி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிமுகவுடன் பாஜக இருப்பதால் தான் சிறுபான்மை வாக்குகளை சிதறடிக்க முடியவில்லை.
லெட்டரில் என்ன உள்ளது? அதிமுகவுடன் பாஜக இல்லையென்றால் சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு மாறலாம் ; திமுக கூட்டணிக்குள் விரிசலும் உருவாகலாம். இதை வைத்துதான் இந்த பிரிவு நாடகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்களோ என சந்தேகம் இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ஜி.கே.வாசன், ''சிறுபான்மை வாக்கு களுக்காக கூட்டணி முறிவுக்கு பாஜக ஒத்துக் கொள்ளுமா? அதிமுகவை பலமாக்குவதில் பாஜகவுக்கு என்ன லாபம்? அதற்கு அதிமுகவுடன் கூட்டணி இருந்தால்தானே பாஜகவுக்கு லாபம்? அப்படியிருக்க இந்த முடிவை எடுக்க வைக்க பாஜக நினைக்குமா? இது சரியாக இல்லையே? என வாசன் எதிர்வாதம் செய்திருக்கிறார்.
இதனை மறுத்து நிர்வாகிகள் பேசியதை வாசன் கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் வாசன். இதற்கு இன்னும் பதில் வரவில்லை. ஆனால், இந்த வாரம் அவர் டெல்லிக்கு செல்ல திட்டமிடுகிறார். டெல்லி செல்வதற்கு முன்பு எடப்பாடியை சந்திக்க விரும்புகிறாராம் வாசன். எடப்பாடியை சீக்ரெட்டாகவோ அல்லது வெளிப்படையாகவோ சந்திப்பார் என்று த.மா.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications