பெரிய ஆளை கொண்டு வரேன் பாருங்க.. மாஸ்டர் மைண்டுடன் ஒப்பந்தம் செய்யும் எடப்பாடி.. புதுசா இருக்கே!
சென்னை: 2026 லோக்சபா தேர்தலுக்கு அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறதாம். திமுகவை விட வேகமாக இந்த தேர்தலுக்கான திட்டங்களை அதிமுக வகுத்து வருகிறதாம். அதை மனதில் வைத்தே எடப்பாடி முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. கடைசியாக 10வது தேர்தலாக.. லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தது.
திமுக குழு: இது ஒரு பக்கம் இருக்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே திமுகவில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து பணிகளை திமுக துவக்கி யிருப்பது குறித்து, ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் சீனியர்களிடம் ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, ஆளும் கட்சியாக இருப்பதால் சில முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள். இப்போதே தேர்தல் பணிகளைத் துவக்குங்கள் என நாம் சொன்னால், பெரிய தாக்கம் எல்லாம் இருக்காது.
நம்ம ஆட்களும் (அதிமுகவினர்) அவ்வளவாக சீரியஸ் காட்ட மாட்டார்கள். அதனால், திமுக தரப்பில் என்னென்ன நடக்கிறது என்பதை கவனிக்கலாம். அதற்கேற்ப நம் கட்சியினரை செயல்படுத்த முனையலாம். இப்போது குழுவெல்லாம் போடுவதால் பலனில்லை என்று சீனியர் சிலர் சொல்ல, மேலும் சிலரோ, கட்சியினருக்கு வேலை கொடுக்காமல் அமைதியாக இருந்தால் சோம்பேறித்தனம் வந்து விடும். அதனால் குறைந்த பட்சம் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மாற்று கட்சிக்குப் போனவர்களை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வருவது போன்ற விசயங்களை கவனிக்கச் சொல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால், அதிமுகவிலும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகள் நடக்கத்தொடங்கியிருக்கிறது.
எடப்பாடி பிளான்: 2026 லோக்சபா தேர்தலுக்கு அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறதாம். திமுகவை விட வேகமாக இந்த தேர்தலுக்கான திட்டங்களை அதிமுக வகுத்து வருகிறதாம். அதை மனதில் வைத்தே எடப்பாடி முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அதன்படி 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆலோசனை நிறுவனம் ஒன்றுடன் கைகோர்க்க எடப்பாடி முடிவு செய்துள்ளாராம் . கட்சித் தலைவர் இபிஎஸ் ஏபி ஷோடைம் மற்றும் ஐ-பேக் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய கட்சி கூட்டத்தில்.. ஒரு பெரிய நிறுவனத்தை கொண்டு வருவேன். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது .. என்ன நடக்கும் என்று பாருங்கள் என்று சூசமாக் கூறி உள்ளாராம். இதனால் எடபபடி ஏபி ஷோடைம் மற்றும் ஐ-பேக் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு நிறுவனம் ஏற்கனவே எடப்பாடியை மனதில் வைத்து.. தமிழ்நாட்டில் ஆள் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications