எடப்பாடி மாஸ்டர் பிளான்.. "அப்படி" பேசிய அன்வர் ராஜாவை மீண்டும் ஏற்றுக்கொண்டது ஏன்? இது ராஜதந்திரம்
சென்னை: அதிமுக கூட்டத்தில் கடுமையாக விமர்சனங்களை வைத்துவிட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜாவை எடப்பாடி பழனிசாமி மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டு உள்ளார். எடப்பாடி பழனிசாமி அன்வர் ராஜாவை ஏற்றுக்கொண்டதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி தலைமையை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில்தான் அன்வர் ராஜா கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அதிமுகவின் தோல்விக்கு பாஜக கூட்டணியும், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளும்தான் காரணம் என்று எடப்பாடியை அன்வர் ராஜா வெளிப்படையாக தாக்கினார்.
எடப்பாடி பழனிசாமியின் தலைமைப்பண்பு சரியில்லை. அவரின் கூட்டணி முடிவுகளில் தவறு செய்துவிட்டார். வன்னியர் இட ஒதுக்கீட்டில் சறுக்கிவிட்டார். பாஜகவிற்கு அதிமுக கட்டுப்பட்டு நடக்கிறது. சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். சசிகலாதான் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று அன்வர் ராஜா பல இடங்களில் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.
சசிகலா: எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தேர்தலில் வென்று இருந்தால் தன்னை எம்ஜிஆர் என்று கூறி இருப்பார். அவர் வலுவான தலைவராக இல்லை. சசிகலா மீண்டும் வர வேண்டும். சசிகலா காலில் விழுந்தவர்கள் அவரை ஏன் ஏற்க தயங்குகிறார்கள் என்றெல்லாம் அன்வர் ராஜா பேசினார். இதை எல்லாம் காரணம் காட்டித்தான் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாலும், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து பேசியதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டார்.

ஏன் சேர்த்துக்கொண்டார்: இப்படி எல்லாம் பேசிவிட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவிற்கு திரும்பி உள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைந்துள்ளார்.
ராஜதந்திரம்: . எடப்பாடி பழனிசாமி அன்வர் ராஜாவை ஏற்றுக்கொண்டதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக மீது தற்போது சிறுபாண்மையினர், முக்கியமாக இஸ்லாமியர்கள் பெரிய அளவில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 17 சதவிகிதம் இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளன.
ஆனால் இந்த வாக்குகளில் பெரும்பாலானவை கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. திமுகவின் வெற்றிக்கும் இந்த வாக்குகள் முக்கிய காரணமாக இருந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் இஸ்லாமியர்கள் அதிமுக மீதான நம்பிக்கையை இழந்து கொண்டே வருகின்றனர்.
இதற்கு இடையில் அன்வர் ராஜாவும் நீக்கப்பட்டதால் இஸ்லாமியர்கள் மேலும் அப்செட் ஆனார்கள். இந்த நிலையில்தான் இஸ்லாமியரை சமாதானப்படுத்தும் விதமாக மீண்டும் அன்வர் ராஜாவை உள்ளே இழுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவோட கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினரை தாஜா செய்ய எடப்பாடி பிளான் போட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் பாருங்கள் அன்வர் ராஜா மீண்டும் எங்களிடம் வந்துவிட்டார் என்பதை காட்டும் விதமாக அன்வர் ராஜாவை உள்ளே இழுத்து இருக்கிறார்.
அன்வர் ராஜா பேட்டி: இதை உறுதி செய்யும் விதமாக அன்வர் ராஜா பேட்டி அளித்துள்ளார். அதில், சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன். லோக்சபா தேர்தலில் பாஜகவிற்காக வாக்கு கேட்பேன். அரசியலில் விமர்சனங்கள் என்பது அனுமதிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால் நான் வாக்கு சேகரிப்பேன். காங்கிரஸ் கட்சியை தவிர பாஜக உடன் அனைவரும் கூட்டணி வைத்துள்ளனர். விலகி இருந்தாலும் அதிமுகவினர் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். இடையில் சின்ன சறுக்கல்தான் ஏற்பட்டது, என்று கூறி உள்ளார்.
ஆனால் வாக்கு வருமா?: ஆனால் அன்வர் ராஜா வருகை சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுகவிற்கு பெற்றுத்தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரவர பாஜகவால் மத பிரிவினை அதிகரித்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இருக்க அன்வர் ராஜா வருகை சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுகவிற்கு தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்வர்ராஜா, ஓபிஎஸ் கூட இருக்கும்போதே, முஸ்லீம்கள், முக்குலத்தோர் ஓட்டு அதிமுகவிற்கு ராமநாதபுரத்தில் கிடைக்கவில்லை. திமுகதான் கடந்த லோக்சபா தேர்தலில் ஜெயித்தது.
அப்படி இருக்க இப்போது ஓபிஎஸ் இல்லை, முக்குலத்தோரும் அதிமுக மீது அப்செட்டில் உள்ளனர். அப்படி இருக்க அன்வர் ராஜா வருகை எடப்பாடிக்கு எந்த அளவிற்கு உதவும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications