Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியின் டார்கெட் ஓபிஎஸ் அல்ல.. பாஜக.. அதிமுக போடும் மிகப்பெரிய திட்டம்.. ஓ இதுதான் ரகசியமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை கழற்றிவிட எடப்பாடி நினைக்கிறார், 2019, 2021 தேர்தலில் அதிமுக தோற்க பாஜகதான் காரணம் என்று எடப்பாடி நினைக்கிறார். இதற்கு ஓபிஎஸ் தடையாக இருப்பார், ஓபிஎஸ் பாஜகவின் ஆள் என்பதால்தான் ஓபிஎஸ்சை கழற்றிவிட எடப்பாடி நினைக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன் இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்தில் திமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சி வி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அதிமுக - பாஜக மோதல் தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியலில் எழுந்துள்ளது. அதிமுக + பாஜக கூட்டணி மொத்தமாக முறிகிறதா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன் இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் பின்வருமாறு,

பேட்டி

பேட்டி

கேள்வி: அதிமுக என்று பெயரை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி தரப்பு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதே?

பதில்: ஏற்கனவே அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. ஜனவரி 4ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. கடந்த 5 மாதங்களாக பல்வேறு கோர்ட்டுகளில் மோதல் நடந்து வருகிறது. இத்தனை காலம் கோர்ட்டுகளில் நடந்த மோதல் தற்போது கிரவுண்ட் லெவல் போராட்டமாக மாறியுள்ளது. ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறார். அதே நாளில் எடப்பாடி திமுகவிற்கு எதிராக தொண்டர்களை திரட்டி பெரிய கூட்டத்தை வைத்து போராட்டம்செய்கிறார். இவர்கள் இருவரும் நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று காட்ட இந்த செயல்களை செய்து வருகின்றனர். எடப்பாடி 27ம் தேதி மீண்டும் இன்னொரு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.

எடப்பாடி பிளான்

எடப்பாடி பிளான்

எடப்பாடி தனியாக கட்சி ஆரம்பிக்கட்டும் என்று ஓபிஎஸ் ஒரு பக்கம் கூறியுள்ளார். இன்னொரு பக்கம் அதிமுக என்று பெயரை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி தரப்பு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில் நிறைய சட்ட சிக்கல் உள்ளது. ஏற்கனவே சசிகலா நான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொண்டு ஊர் ஊராக சென்று கொண்டு இருக்கிறார். இதை எல்லாம் பார்க்க காமெடியாக இருக்கிறது. காமெடி சேனல்களை விட மிக காமெடியாக இருக்கிறது. கடந்த 5 மாதங்களாக இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

சிவி சண்முகம்

சிவி சண்முகம்

கேள்வி: திமுக - பாஜக கூட்டணி வைக்கும் என்று சிவி சண்முகம் கூறி இருக்கிறாரே.. அதிமுக - பாஜக இனி கூட்டணி வைக்காது என்று சிவி சண்முகம் சொன்னதாக இதை எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: ஆம் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த அர்த்தத்தில்தான் அவர் அதை சொல்லி இருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் சிவி சண்முகம் கொடுத்த பேட்டியில் அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம். சிறுபான்மையினர் எங்களுக்கு வாக்கு அளிக்கவில்லை என்று சிவி சண்முகம் கூறினார். இப்போது நடக்கும் ஓபிஎஸ் - எடப்பாடி சண்டைக்கும் இதுதான் காரணம். பாஜகவை கழற்றிவிட எடப்பாடி நினைக்கிறார். 2019, 2021 தேர்தலில் அதிமுக தோற்க பாஜகதான் காரணம் என்று எடப்பாடி நினைக்கிறார். இதற்கு ஓபிஎஸ் தடையாக இருப்பார். ஓபிஎஸ் பாஜகவின் ஆள் என்பதால்தான் ஓபிஎஸ்சை கழற்றிவிட எடப்பாடி நினைக்கிறார்.

பாஜக கூட்டணி

பாஜக கூட்டணி

பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட எடப்பாடி முட்டுக்கட்டையாக இருப்பார் என்பதால்தான் ஓபிஎஸ்ஸை இப்போதே வெளியே அனுப்ப எடப்பாடி பார்க்கிறார். எடப்பாடியின் உண்மையான டார்கெட் என்று பார்த்தால் அது ஓபிஎஸ் கிடையாது. எடப்பாடியின் உண்மையான டார்கெட் பாஜகதான். திமுக - பாஜக கூட்டணி வைக்கும் என்று சிவி சண்முகம் கூறியதன் உண்மையான அர்த்தம்.. பாஜகவோடு இனி அதிமுக கூட்டணி வைக்காது என்ற அர்த்தத்தில்தான் எடப்பாடி சொல்லி இருக்கிறார்.

ஓபிஎஸ் நீக்கம் ஏன்?

ஓபிஎஸ் நீக்கம் ஏன்?

ஏனென்றால் 13 - 15% இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவிற்கு செல்கிறது. பாஜகவுடன் இருந்ததால்தான் இந்த வாக்குகள் தங்களுக்கு வரவில்லை என்று எடப்பாடி நினைக்கிறார். அவரின் எண்ணம் சரியானது. ஜெயலலிதா இருந்த வரை மைனாரிட்டி வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவிற்குத்தான் சென்றது. ஆனால் பாஜகவோடு - அதிமுக கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவை விட்டு திமுகவிற்கு சென்றுள்ளது. இதற்கு முன் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்த 2004 தேர்தலில் அதிமுக வாஷ் அவுட் ஆனது. அதன்பின் ஜெயலலிதா பாஜகவை கிட்டவே சேர்க்கவில்லை.

அதிமுக வாஷ் அவுட்

அதிமுக வாஷ் அவுட்

அதனால்தான் ஜெயலலிதா தொடர்ந்து ஜெயிக்க முடிந்தது. தற்போது அதை எடப்பாடி உணர்ந்துகொண்டார். 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் 2026லும் தோல்வி அடைந்துவிடுவோம் என்று எடப்பாடி நினைக்கிறார். அதனால் பாஜகவை விட்டு அகன்றுவிட வேண்டும் என்று பார்க்கிறார். அதனால்தான் அவர் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் ஓ பன்னீர்செல்வத்தை விரட்டி உள்ளார். இதை பாஜக எப்படி எதிர்கொள்ளும். பாஜகவை எடப்பாடி எதிர்க்கும் பட்சத்தில் எடப்பாடியுடன் இருக்கும் ஆதரவாளர்கள் அவருடன் இருப்பார்களா என்ற கேள்வி உள்ளது. அதெல்லாம் போக போகத்தான் தெரியும்.

பாஜக பயம்

பாஜக பயம்

கேள்வி: எடப்பாடி பாஜகவை கழற்றிவிட போகிறார் என்கிறீர்கள்.. ஆனால் பாஜக நிர்வாகிகள் பலர் இன்னும் பாஜக - அதிமுக கூட்டணி நீடிக்கிறது என்கிறார்களே?

பதில்: தங்களை அதிமுக கழற்றிவிட்டுவிடுமோ என்று பாஜக அஞ்சுகிறது. கூட்டணி இருக்கிறது இருக்கிறது என்று பாஜக தலைவர்கள் தானே சொல்கிறார்களே ஒழிய அதிமுக தலைவர்கள் யாரும் சொல்லவில்லை. அதிமுக தலைவர்கள் இதை பெரிசாக கண்டுகொள்ளவில்லை. சிவி சண்முகம் பேசியதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவிக்கவில்லை. அதிமுக கூட்டணி இல்லை என்றால் பாஜக இங்கே ஜீரோ என்பது அண்ணாமலைக்கும் தெரியும். 3% வாக்குகள் அவருக்கு இருக்கிறது. அது வளர்ந்து இருந்தால் கூட 6- 7% வாக்குகள் இருக்கும் என்று கூட வைத்துக்கொள்வோம். ஏன் 10% வாக்குகள் இருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். அதில் உண்மை இல்லை. அப்படியே உண்மையாக 10% இருந்தால் கூட பாஜகவிற்கு அது பெரிதாக உதவாது. பாஜகவால் எந்த இடங்களையும் வெல்ல முடியாது.

பாஜக திட்டம்

பாஜக திட்டம்

பாஜக வெல்ல வேண்டும் என்றால் 30 சதவிகித வாக்குகளை வெல்ல வேண்டும். இல்லையென்றால் 20 சதவிகித வாக்குகள் உள்ள கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். பாஜக என்னதான் வளர்ந்தாலும், பிரயோஜனம் கிடையாது. அதிமுகவுடன் இருந்தால் மட்டுமே பாஜகவிற்கு இடம் கிடைக்கும். பாஜக வெற்றிபெற வேண்டும் என்று கனவு காண்பதற்கு கூட அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். அதிமுக இல்லாமல் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. பாஜக சாதிக்க வேண்டும் என்றால் ஒன்று அதிமுகவுடன் நிற்க வேண்டும் அல்லது திமுகவுடன் நிற்க வேண்டும். அதனால்தான் அதிமுகவை மிரட்டி, உருட்டி தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க பாஜக நினைக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+