பேசாம வந்துடுங்க.. சட்டென "ரைட் ஹேண்டிற்கு" போனை போட்ட எடப்பாடி? கிடைக்கிற கேப்பில் எல்லாம் அதிரடி
5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக பிரம்மாண்ட கூட்டத்தை பெரும் செலவு செய்து நடத்த உள்ளாராம்.
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில விஷயங்களை முன்னெடுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்று உள்ளது.
எடப்பாடிக்கு சின்னம் கிடைத்தும், ஓபிஎஸ், அமமுக தரப்பு போட்டியிடாத போதும் கூட அதிமுக தோல்வி அடைந்து உள்ளது. எடப்பாடியின் தோல்வி ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அதிமுக பாஜக இடையிலும் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

ஓ பன்னீர்செல்வம் பிளான்
எடப்பாடியின் ஈரோடு கிழக்கு தேர்தல் தோல்வி, அதிமுகவிற்கு எதிராக பாஜக இருக்கும் சூழ்நிலை போன்றவரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனது பவரை காட்ட ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளாராம். அதன்படி திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளாராம். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக பிரம்மாண்ட கூட்டத்தை பெரும் செலவு செய்து நடத்த உள்ளாராம். பொன்மலையில் இவர் அதிமுக பெயரில் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி.. தனக்கு பின்தான் கட்சி இருக்கிறது என்று காட்ட திட்டமிட்டுள்ளாராம். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைதேர்தலால் அதிமுக நிர்வாகிகள் அப்செட்டில் உள்ள நிலையில், அவர்களை தன் பக்கம் திருப்பும் விதமாக ஓ பன்னீர்செல்வம் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

எடப்பாடி பிளான்
ஆனால் இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி சுத்தமாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பொதுக்குழு வழக்கில் நாம் வென்றுவிட்டோம். இனி சிவில் வழக்குகள் மட்டுமே உள்ளன. அதில் ஓ பன்னீர்செல்வத்தால் ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் ஆணையம் மட்டுமே இப்போது இடைஞ்சலாக இருக்கிறது. அதையும் எளிதாக சமாளிக்க முடியும். தேர்தல் ஆணையத்திற்கு நாம் கடிதம் அனுப்பி உள்ளோம். அங்கே நம் கோரிக்கைகளை வைப்போம். மற்றபடி ஓ பன்னீர்செல்வத்தின் சாப்டர்முடிந்துவிட்டது. இனி அவரைப்பற்றி பேசக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக இருக்கிறாராம்.

திட்டம் என்ன?
அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம். ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத வண்ணம் எடப்பாடி காய் நகர்த்தி வருகிறாராம். ஏப்ரல் இரண்டாம் வாரமே போட்டியின்றி தேர்வாகி, கட்சியை தனது அதிகாரபூர்வ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளைதான் கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் பேசி இருக்கிறாராம்.

ஓ பன்னீர்செல்வம்
அதற்கு முன்பாக ஓ பன்னீர்செல்வத்திடம் நெருக்கமாக இருக்கும் இரண்டு, மூன்று நிர்வாகிகளை கூட தன் பக்கம் மொத்தமாக இழுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு உள்ளாராம். அதன்படி ஓ பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருக்கும் ரைட் ஹேண்ட் ஒருவருடன் நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு போனில் பேசியதாக கூறப்படுகிறது. அதன்படி எங்கள் அணிக்கு வந்துவிடுங்கள். ஓ பன்னீர்செல்வத்துடன் இருப்பதால் உங்களுக்கு பலன் இல்லை. பேசாமல் எங்கள் டீமிற்கு வந்துவிடுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஓ பன்னீர்செல்வத்தின் " ரைட் ஹேண்டிடம்" பேசி இருக்கிறாராம். ஓ பன்னீர்செல்வம் மீது கடந்த சில நாட்களாக அப்செட்டில் இருக்கும் அந்த நபரும் இந்த சான்சை பயன்படுத்திக்கொண்டு.. வெற்றிபெறுபவர்கள் பக்கம் சென்றுவிடலாம் என்று நினைக்கிறாராம்.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்?












Click it and Unblock the Notifications