இது Make in Tamilnaduதான் ஆனால் Made by Amma Arasu.. முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
சென்னை: ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் அதிமுக ஆட்சியில் போடப்பட்டது. ஆனால் அதை தங்கள் சாதனையாக முதல்வர் ஸ்டாலின் காட்டி கொண்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பிரலபலமானது அமெரிக்காவின் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட். இந்த நிலையில் இந்தியாவில் ஐபோன் 13 உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில்தான் இந்த உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதை ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக் பொருள்களை உற்பத்தி செய்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஐபோன் 13
சென்னையில் ஐபோன் 13 உற்பத்தி தொடங்கியுள்ளதாக நாளிதழ்களில் வந்த செய்தியை சுட்டிக் காட்டிய முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நமது பயணத்தில் இது மற்றொரு மைல்கல். தமிழகத்தில் உற்பத்தி செய்து இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம் என முதல்வர் ட்வீட் போட்டிருந்தார்.

முதல்வர் ட்வீட்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் ட்வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி பதிலடி
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த அம்மா அரசு ஆட்சியிலேயே போடப்பட்டது ஆனால் வழக்கம் போல் இதையும் தங்கள் சாதனை போல காட்டி கொள்ள முயலும் @mkstalin
அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன்,
இது #MakeinTamilnadu தான் ஆனால் #MadebyAmmaArasu என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக அரசு
அதிமுக அரசில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்வதாக அதிமுக விமர்சனம் செய்து வருகிறது. இது தொடர்பாக சட்டசபை மானியக் கோரிக்கைகளின் போது காரசார விவாதம் நடைபெறுகிறது. ஸ்டிக்கர் ஒட்டும் திமுக என்றெல்லாம் அதிமுக மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications