சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயலலிதா ஆத்மா சும்மா விடாது.. ஒருத்தர் இறந்து போய்ட்டாரு.. இன்னொருத்தர் கால் போச்சு.. இபிஎஸ்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்தவர் மரணமடைந்துவிட்டார், ஜெயலலிதாவின் அறையை எட்டி உதைத்தவரின் கால்கள் உடைந்துவிட்டன. இது ஜெயலலிதாவின் சாபம் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Edappadi Palaniswami-ஐ MGR மற்றும் Jayalalitha-வின் ஆன்மா மன்னிக்காது - Vaithilingam

    ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நேற்றைய தினம் தீர்ப்பை வழங்கினார்.

    அந்த தீர்ப்பில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதாவது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்பதுதான் அந்த தீர்ப்பின் சாராம்சம் ஆகும்.

    ஓபிஎஸ் மகிழ்ச்சி நீடிக்கலையே.. 'அப்செட்’ - குறுக்கே விழுந்த '3 தடைகள்’ - எழுந்து அமர்ந்த எடப்பாடி! ஓபிஎஸ் மகிழ்ச்சி நீடிக்கலையே.. 'அப்செட்’ - குறுக்கே விழுந்த '3 தடைகள்’ - எழுந்து அமர்ந்த எடப்பாடி!

     ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

    ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

    இந்த நிலையில் இன்றைய தினம் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்தால்தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். எனவே கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு ஒன்றிணைய வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.

     பொதுக் குழு

    பொதுக் குழு


    இந்த பேட்டி நடந்து கொண்டிருக்கும் போதே அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    அப்போது அவர் கூறுகையில் ஓபிஎஸ் எப்போதும் அழைப்பு விடுத்துக் கொண்டே இருப்பார். தர்மயுத்தம் நடத்திய போதும் இப்படித்தான் அழைப்பு விடுத்தார். அவருக்கு பதவிதான் முக்கியம். பதவிக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். கட்சியில் உழைக்கவே மாட்டார், ஆனால் பதவி மட்டும் வேண்டும்.

    மகனுக்கும் பதவி

    மகனுக்கும் பதவி

    அவருக்கும் அவரது மகனுக்கும் பதவி கிடைத்தால் போதும். மற்றவர்களை பற்றி அவருக்கு கவலையே கிடையாது. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு ஓபிஎஸ்தான் காரணம். அதிமுக பொதுக் குழுவுக்கு ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவருக்கென இருக்கை போடப்பட்டிருந்தது.

     அலுவலகத்திற்கு பூட்டு

    அலுவலகத்திற்கு பூட்டு

    ஆனால் அவர் அங்கு வராமல் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். எல்லாரும் பொதுக் குழுவில் இருந்ததால் அந்த அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்தது. குண்டர்களை வைத்து அந்த கதவை உடைத்தார். அத்தோடு ஜெயலலிதா அறைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை எல்லாம் களவாடிச் சென்றனர்.

    தலைமை பொறுப்பு

    தலைமை பொறுப்பு

    ஒரு தலைமை பொறுப்பில் இருக்கும் நபர் இப்படி ரவுடிகளையும் குண்டர்களையும் அழைத்து கொண்டு கட்சி அலுவலகத்தை உடைத்தால் அவரை தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள்? எம்ஜிஆர் தொண்டர்களுக்காக விட்டுச் சென்ற கோயில்தான் அதிமுக தலைமை அலுவலகம்.

    ஆன்மா சும்மா விடாது

    ஆன்மா சும்மா விடாது

    ஒவ்வொரு தொண்டனும் எம்ஜிஆர் மாளிகையை கோயிலாக மதிக்கிறார்கள். அங்கு செருப்பு காலால் எட்டி உதைத்து ரகளை செய்யலாமா, எம்ஜிஆர் மாளிகை கேட்டை உடைத்தவர் இறந்து போய்விட்டார். அது போல் ஜெயலலிதாவின் அறையை எட்டி உதைத்தவரின் கால்கள் உடைந்துவிட்டன. இரு பெரும் தலைவர்களுடைய ஆத்மா தண்டனை கொடுத்துவிட்டது.

    English summary
    Edappadi Palanisamy says that Jayalalitha's soul wont let anyone who breaks party office on July 11.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X