கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா
சென்னை: அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ளார். இதில், கோயம்புத்தூரில் 6 தொகுதிகளில் உள்ள சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 23 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பெயர் இடம் பெற்றிருந்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் நான்காவது முறையாக எஸ்.பி வேலுமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்
கோவை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் சிட்டிங் எம்எல்ஏ ஏகே செல்வராஜூக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதனால் அங்கும் புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். சூலூர் தொகுதிக்கு சிட்டிங் எம்எல்ஏ கந்தசாமி, சிங்காநல்லூர் தொகுதிக்கு சிட்டிங் எம்எல்ஏ கேஆர் ஜெயராம், கவுண்டம்பாளையம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார், கிணத்துக்கடவு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ தாமோதரன், பொள்ளாச்சி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ஜெயராமன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அம்மன் அர்ஜூனனுக்கு தெற்கு தொகுதி
கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள அம்மன் அர்ஜூனனுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ஓகே சின்ராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வால்பாறை (தனி) கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த அதிமுக அம்மா பேரவை பொருளாளர் டி. லட்சுமண சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ஏகே செல்வராஜூக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. செங்கோட்யைன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய போது, அவரிடம் இருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை பறித்து, இதே ஏகே செல்வராஜூக்கு தான் வழங்கினார். அவரும் செங்கோட்டையனை எதிர்த்து கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications